tamilnadu

img

‘கர்மயோகி பாரத்’ இணைய வழி பயிற்சித் தேர்வில் மாநிலங்களவை பெண் அதிகாரி முதலிடம்

புதுதில்லி, ஜூன் 3- பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ‘கர்மயோகி பாரத்’, என்னும் அமைப்பு இணைய வழி பயிற்சி வகுப்பு களை, குடிமை அதிகாரிகளுக் கும்  அரசு அதிகாரிகளுக்கும் நடத்தி வருகிறது. இதில்  மே மாதம் நடத்திய தேர்வில் மாநி லங்களவையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வரும் வியட்நாம் வீரமணி அகில இந்திய அளவில் முத லிடத்தைப் பிடித்துள்ளார். ‘கர்மயோகி பாரத்’ என்பது மனித வளம் தொடர்பான திறன் பயிற்சியை அரசு அதி காரிகளுக்கு அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இந்தத் தேசியத் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை 2020ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதைச் செயல்படுத்துவ தற்காக, ஐஜிஓடி (IGOT- Indian Government Online Training) என்ற இணைய தளத்தை உரு வாக்கி, அதிகாரிகளுக்கு ஒவ் வொரு மாதமும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரு கிறது. குடிமைப்பணி யாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்  ஆற்றும் கடமையில் தங் களை முழுமையாக அர்ப்ப ணித்துக்கொள்ள வைக்கும் நோக்கத்துடன், இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டி ருக்கிறது. இதில் அதிகாரிகள் சுமார் 451 பிரிவுகளில் தங்களை மெருகேற்றிக்கொள்ள இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு இணைய வழி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. ‘கர்மயோகி பாரத்’ நடத்திய மே மாதத்திற்கான பயிற்சி வகுப்புகளில் மாநிலங்கள வையைச் சேர்ந்த உரை மொழிபெயர்ப்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணி புரிந்துவரும்,  வியட்நாம் வீர மணி 229 சான்றிதழ் வகுப்புகளை நிறைவு செய்து அகில இந்திய அளவில் முத லாவதாக வந்திருப்பதாக, ‘கர்மயோகி பாரத்’ கூறி இவ ரைப் பாராட்டியுள்ளது.

இதேபோல் ஏப்ரல் மாதம் நடந்த பயிற்சி வகுப்புகளில் மக்களவையைச் சேர்ந்த துணைச் செயலாளர் மதி வாணன் தமிழ்மணி முதலா வதாக வந்திருக்கிறார். அவர் 110  வகுப்புகளை நிறைவு செய்துள்ளார். நாடாளுமன்ற மக்க ளவை, மாநிலங்களவை மற்றும் அரசாங்கத்தில் பணி யாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் முதலானவர்கள் பங்கேற்ற இப்பயிற்சி வகுப்புகளில் ஏப்ரல் மாதமும், மே மாத மும் முதலாவதாக வந்த இரு வருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கர்மயோகி பாரத்’ அமைப்பு ஒவ்வொரு மாதமும் அரசு அதிகாரிகளுக்கு இணைய வழி பயிற்சி வகுப்பு களை நடத்தி வருகிறது. மொத்தமுள்ள 451 பாடங்க ளில் மூன்று பாடங்களை அனைவரும் கட்டாயம் பயிற்சி பெற்றாக வேண்டும் என்று கர்மயோகி பாரத் கூறியுள்ளது. இது அரசு ஊழியர்க ளுக்கான நடத்தை விதிகள், பெண்களுக்கு எதிரான பாலி யல் குற்ற தடுப்புச் சட்டங்கள், சமீபத்தில் வெளிவந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் டெட் போன்ற எண்ம தொழில் நுட்பங்களில் புலமை பெறு தல் ஆகியவை கட்டாயம் என்று ‘கர்மயோகி பாரத்’ கூறியுள்ளது. அகில இந்திய அளவில் முதலாவதாக வந்துள்ள வியட்நாம் வீரமணி, தீக்கதிர் செய்தியாளர் ச.வீரமணியின் மூத்த புதல்வியாவார்.  (ந.நி.)

;