tamilnadu

img

தமுஎகச சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா

 கடலூர்,ஜூலை.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் சார்பில் நூல்கள் வெளியிட்டு விழா கடலூரில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கவிஞர் பால்கி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். குடியிருப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.மருத வாணன், தமுஎகச தலைவர் ஜானகிராஜா, செயலாளர் கேத்தரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்தலனி எழுதிய ‘சாராவின் டைரி’ நூலை தமுஎகச மதிப்புரு தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி பெற்றுக் கொண்டார். ‘பொண்ணு படிச்சு என்ன பண்ண போறா’ என்ற சிறுகதை தொகுப்பை சாகித்திய அகடாமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் வெளியிட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சி ராணி பெற்றுக்கொண்டார்.சவுத் விஷன் பதிப்ப கத்தின் நீதி ராஜன், எம்.கே பதிப்பகத்தின் ஜெய்கணேஷ் ஆகியோர் பேசினர். நூல்கள் வெளியிட்டு விழாவை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், புதுச்சேரி மூத்த தலைவர் த.முருகன், சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தமு எகச மாநில பொருளாளர் சு.ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள். எழுத்தாளர் நெய்த லனி ஏற்புரை நிகழ்த்தினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ்  கண்ணன் நன்றி கூறினார்.