tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

போலீசாரின் தடையை மீறி சென்று, விபத்தில் சிக்கிய 2 பேர் கைது

கோவை, அக்.28- கோவை டவுன்ஹால் பகுதியில் குடியரசு துணைத்தலை வருக்கான போலீசாரின் பாதுகாப்பு தடையை மீறி, இரு சக்கர வாகனத்தில் போதையில் சென்று, விபத்தில் சிக்கிய  2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாயன்று கோவை வந்தார். அப்போது டவுன்ஹால் பகுதியில் மாநக ராட்சி அலுவலக வளாகத்திலிருந்த காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, குடி யரசு துணைத்தலைவர் வருகையையொட்டி, அங்கு போக்கு வரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென மணிக்கூண்டு  நோக்கி ஒருவழிப்பாதையில் போலீசாரின் தடையை மீறி  தலைக்கவசம் அணியாமல் 2 இளைஞர்கள் இருசக்கர வாக னத்தில் போதையில் அதிவேகமாக அவ்வழியாகச் சென்ற னர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போதும் சிக்காமல் தப்பிச்சென்றனர். அப்போது புனித மைக்கேல் பள்ளி அருகே அதிவேகமாக சென்ற இளைஞர் களின் வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி இருவரும்  தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார்,  இருவரையும் பிடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கரும்புக்கடை சாரமேடு பகுதியை  சேர்ந்த ஆனீஷ் ரகுமான் மற்றும் ஆஷிக் என்பது தெரியவந் தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மின்தடை

ஈரோடு, அக்.28- ஈரோடு, விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் புதனன்று (இன்று) மாதாந் திர பராமரிப்புப்பணி மேற் கொள்ளப்படவுள்ளது. இத னால் பெரிய வீரசங்கிலி,  சின்ன வீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை, கவுண் டன்பாளையம், பச்சாக் கவுண்டன்பாளையம், கினிப் பாளையம், கிரேநகர், கரட் டூர், பாப்பம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் புதனன்று  காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் மனு

ஈரோடு, அக்.28- குடியிருப்புகள் அருகே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக் கக்கூடாது என தெரிவித்து, பொதுமக்கள் ஈரோடு ஆட்சியர்  எஸ்.கந்தசாமியிடம் திங்களன்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் சாலை  பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், வைராபாளை யம், வட்டர் ஆபீஸ் சாலை போன்ற இடங்கள் முற்றிலும் விவசாய  நிலம் சார்ந்த குடியிருப்பு பகுதியாகும். நாங்கள், 40 ஆண்டுக ளுக்கு மேலாக அங்கு வசிக்கிறோம். இங்கு வசிப்போர் தினக்கூலி  மற்றும் பிற வேலைக்கு செல்வோராக உள்ளோம். எங்கள் பகுதி யில் இதுவரை டாஸ்மாக் கடை இல்லை. இந்நிலையில், வயல்  வெளியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி பெற்று,  அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு அமைந் தால், நாங்கள் நடமாடுவது சிரமம். விவசாய நிலங்களுக்குள் பாட் டில்களை வீசி சென்றால், விவசாயிகள், கால்நடைகள் பாதிக்கும்.  பள்ளி செல்லும் குழந்தைகள், புதிதாக அமையும் கடை பகுதி  வழியாக செல்லும்போது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.  எனவே, அங்கு டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.