tamilnadu

img

சேந்தமங்கலம் ஊராட்சியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேந்தமங்கலம் ஊராட்சியில்  சிபிஎம்  ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக.30 - திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியில் பொது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சேந்த மங்கலம் விஏஓ அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.வி.ஏழு மலை, டி.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். கிளைச் செயலாளர்கள் டி.வெங்கடேசன், எல்.அந்தோணி சாமி, பி.பன்னீர்செல்வம், சேந்த மங்கலம் கிளை ஆர்.செல்வம், ஆர்.கோவிந்தன், ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.ஸ்ரீராம், வண்டிபாளையம் கிளை எஸ்.சிவகண்டன், பி.காசி மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், ஊராட்சியில் எரியாத மின்விளக்குகளை உடனடியாக சீர்செய்திட வேண்டும், பருவமழை பெய்து வரும் சூழலில் தொற்று நோய் பரவலை தடுக்க இலவச மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும், வண்டிபாளையம் மற்றும் மாரனோடை ரயில்வே சுரங்கப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மழைக்காலங்க ளில் தேங்கிய தண்ணீரை உடனடி யாக வெளியேற்ற வேண்டும், சிவன்கோவில் தெரு நடுத்தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும், மழையம்மன் கோவில் சாலையை சீர்செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, சிபிஎம் முன்னாள் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் பி.ராமச்சந்திரன் நூற்றாண்டை யொட்டி அவருடைய உருவப்பட த்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.