tamilnadu

img

திலீப்பின் குடியிருப்பில் அதிகாரிகள் சோதனை 6 செல்பேசிகளில் ஒன்றின் பதிவுகள் அழிப்பு

கொச்சி, பிப். 2- கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த 6 செல்பேசிகளில் ஒன்றில் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது வியாழ னன்று (பிப்.3) விசாரணை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி 6 செல்பேசிகளும் ஆலுவா மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டன. பதிவுகள் அழிக்கப்பட்ட செல்பேசியிலிருந்து முக்கியமான தகவல்கள் தொலைந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் இந்த தகவல்கள் மீட்கப்படும் என நம்பப்படுகிறது. திலீப் தன்னிடம் இல்லை என்று கூறிய செல் பேசியில் இருந்து 2000 அழைப்புகள் வந்ததாக அரசு தரப்பு உயர் நீதி மன்றத்தில் சிடிஆர் (அழைப்பு விவர பதிவுகள்) தாக்கல் செய்துள்ளது. இந்த செல்பேசி ஆகஸ்ட் 2021 வரை பயன்பாட்டில் இருந்தது. அதை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு கோரியிருந்தபோதிலும், அப்படிப்பட்ட போனை தான் பயன்படுத்தியதில்லை என்று திலீப் கூறிவருகிறார்.  

மும்பையில் உள்ள ஒரு தனியார்  ஆய்வகத்தில் சொந்தமாக பரிசோத னை செய்ய இரண்டு செல்பேசிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், எந்த செல்பேசி மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை திலீப் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தின் அல்லது புலனாய்வுக் குழுவின் அனுமதியின்றி, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் செல்பேசிகள் தனியார் ஆய்வகத்திற்கு அவசரமாக அனுப்பியதை குற்றப்பிரிவு கண்ட றிந்துள்ளது.

திலீப் குடியிருப்பில் ரெய்டு

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பின் குடியிருப்பில் குற்றப்பிரிவு அதிகாரிகள் செவ்வாயன்று (பிப்.1) சோதனை நடத்தினர். அடுக்கு மாடி குடியிருப்பில் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக இயக்குநர் பி.பாலச் சந்திரகுமார் கூறியதன் அடிப்படை யில், எர்ணாகுளம் எம்.ஜி.சாலையில் உள்ள மேதர் அடுக்குமாடி குடியிருப் பில் சோதனை நடத்தப்பட்டது. 2017 டிசம்பரில் நடிகர் திலீப், அவரது அண்ணன் அனூப், மைத்துனர் சுராஜ்  ஆகியோர் இங்கு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குடியிருப்பில் உள்ள பார்வையாளர் பதிவேடு விசாரணை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டது. குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் ஊழியர்களிடம் தகவல் சேகரிக்கப் பட்டது.

திலீப்பின் செல்பேசியை பழுது நீக்கம் செய்த வாலிபர் மரணம் குறித்து  குற்றப்பிரிவு விசாரணை நடத்த வுள்ளது. நடிகர் திலீப்பின் செல்பேசி களை சர்வீஸ் செய்து வந்த திருச்சூர் கொடகரையை சேர்ந்த சலீஷ் மர ணத்தில் சந்தேகம் இருப்பதாக உற வினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும். புகாரில் உற வினர்கள் கூறும் பிரச்சனைகள் குறித்து மட்டுமே குற்றப்பிரிவு விசாரணைக் குழு ஆய்வு செய்யும். சலீஷ் இயக்கிய குறும்படத்தின் நடிகர்களையும் விசாரணைக்குழு சந்திக்க உள்ளது. நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டியது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலை யில் சலீஷ் மரணத்தில் திரையுலகைச் சேர்ந்த சிலர் சந்தேகம் தெரிவித்துள்ள னர். இதையடுத்து விசாரணை நடத்தக் கோரி சலீஷின் சகோதரர் சிவதாஸ் அங்கமாலி காவல்துறையிடம் புகார்  செய்தார். பின்னர் இந்த புகார் குற்றப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டது. விபத்து மரணம் தொடர்பான வழக்கில் எந்தவித சந்தேகமும் இல்லை என அப்போது விசாரணைக் குழு கண்டறிந்தது. இந்த சம்பவ த்தில் உறவினர்களுக்கு சந்தேகம் எழவில்லை.

ஆலுவா நீதிமன்றத்தில் செல்பேசிகள்

உயர்நீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த செல்பேசிகள் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணி யளவில் ஆலுவா ஜூடிசியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் ஆனி வர்கீஸ் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. விசாரணைக் குழுவிடம் செல்பேசி களைக் கொடுப்பதா என்பதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்மானிக் கும். திலீப்புக்கு அதிக சலுகை காட்டப்படுவதாக கூற வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும், அதை ஊக்கு விக்க முடியாது என்றும் உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. முன்ஜாமீன் மனுக்களில் சாதாரண குற்றவாளி களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. செல்பேசிகளை ஒப்படைக்க வேண்டாம் என்கிற திலீப் தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இரண்டு முதல் ஏழு வரையிலான வரிசை எண்களைக் கொண்ட செல் பேசிகள், பதிவாளர் அறையில் சைபர் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டன. தொலைபேசி எண் ஏழு அடையாளம் காண முடியவில்லை. மேலும் சில புதிய செல்பேசிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டிஜிபி தெரி வித்தார். அழைப்பு பதிவுகளை சரிபார்த்தபோது ஒரு செல்பேசியை திலீப் ஒப்படைக்கவில்லை என்பது தெரியவந்தது. இவை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய செல்பேசிகளா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அவரை காவலில் வைத்து  விசாரிக்க வேண்டும் என்றும் டிஜிபி கோரிக்கை விடுத்தார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழக் கிழமைக்கு (பிப்.3)  ஒத்திவைக்கப் பட்டது.