tamilnadu

ஆர்எஸ்எஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் படுகொலை

புதுதில்லி, டிச.3- கேரள மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி செயலாளர் ஒருவரை ஆர்எஸ்எஸ் குண்டர்கள் கொடூர மான முறையில் கொலை செய்திருப்பதற்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம், திருவல்லா, பத்தனம் திட்டா மாவட்டத்தில் திருவல்லாவில்  கட்சி யின்  பெரிங்கரா உள்ளூர் கமிட்டி செயலாளர் பி.பி.சந்தீப் குமார் என்பவர்   ஆர்எஸ்எஸ்/பாஜக குண்டர்களால் கொடூரமான முறை யில் கொல்லப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும், மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு  படைத்தவருமான 36 வயதுடைய சந்தீப்  சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது குண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு கத்திகளால் பலமுறை குத்தப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவமானது கேரளா வில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களைக் குறி வைத்துக் கொலை செய்திடும் ஆர்எஸ்எஸ்/ பாஜக-வின் அரசியல் கொலையின் தொடர்ச்சியாகும். இக்கொலை சம்பந்த மாகக் கைது செய்யப்பட்டுள்ள பிரதானமான வர்களில் ஒருவர் பெரிங்கராவில் உள்ள பாஜக-வின் இளைஞர் அணியின் தலை வரும், ஆர்எஸ்எஸ் ஊழியருமாவார்.   மாநிலத்தில் அமைதிச் சூழ்நிலை நிலவுவதைச் சீர்குலைத்திட வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் குறிக்கோ ளாகும். இதற்காகவே   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திட ஆர்எஸ்எஸ்/பாஜக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் வெற்றி பெற அனுமதிக்க முடியாது. இத்தகைய வன்முறை தாக்குதல்களை ஆர்எஸ்எஸ்/பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;