மதுரை, பிப்.3 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளரும், பேராசிரியரும், மிகச் சிறந்த எழுத்தாளரும், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் சார்பில் சிறந்த தமிழறிஞ ருக்கான பொற்கிழி விருது பெற்றவரும், 70-க்கும் மேற்பட்ட பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரி யர் அருணன் அவர்களின் 75 ஆவது அகவை தினம் ஞாயிறன்று கொண்டா டப்பட்டது. இதையொட்டி, ஞாயிறன்று அவுட் போஸ்டில் அமைந்துள்ள மதுரை காம ராசர் பல்கலைக்கழகக் கல்லூரி வளா கம் தொல்காப்பியர் அரங்கில், அருணன் நூல்கள் பற்றிய முழுநாள் ஆய்வரங்கம் நடைபெற்றது. இந்த ஆய்வரங்க நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் தலைவரும், மாநிலக் குழு உறுப்பினருமான இளங்கோவன் கார்மேகம் தலைமை வகித்தார். தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர் அ.ந.சாந்தாராம் வரவேற்றுப் பேசினார். தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா நோக்கவுரையாற்றினார். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளரும், தெற்கு-2 மண்டல ஒருங் கிணைப்பாளருமான வெண்புறா வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு தலைப்புகளில் நடைபெற விருக்கும் கருத்தரங்க நிகழ்வின் 5 அமர்வுகளுக்கும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான மதுரை நம்பி, இளங்கோ, பூ.பாண்டிய முத்துக்குமார், கவிஞர் நௌஷாத், எழுத்தாளர் அமுதா செல்வி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். முதல் அமர்வில், தமிழரின் தத்துவ மரபு குறித்து ச.தமிழ்ச்செல்வன், அருணனின் நாவல்கள் குறித்து ம.மணி மாறன் ஆகியோர் பேசினர். 2 ஆவது அமர்வில் திராவிடம் பற்றிய எழுத்துக் கள் குறித்து பா.ஆனந்த் குமார் பேசி னார். 3 ஆவது அமர்வில் கடவுளின் கதை குறித்து ஸ்ரீரசா, மதவெறியை ஊடறுக்கும் எழுத்துக்கள் குறித்து பெரியசாமி ராஜா, 4 ஆவது அமர்வில் கலை இலக்கியம் பற்றிய சொல்லா டல்கள் குறித்து மு.முருகேஷ், காலந்தோறும் பிராமணியம் குறித்து டி.ஆர்.பர்வத வர்த்தினி, 5 ஆவது அமர்வில் தத்துவ உரையாடல்கள் குறித்து சோழ.நாகராஜன், பயண வாழ்வில் மதுரை குறித்து சரவணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து மாலையில், தமுஎகச-வின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் பேரா.அருணனின், எழுத்துப் பணிகளுக்கான பாராட்டு விழா நடை பெற்றது. விழாவில், தமுஎகச மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், மாநில துணைச் செயலாளருமான ஸ்ரீரசா தலைமை வகித்தார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் எழுத் தாளர் ச.தமிழ்ச்செல்வன், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் க. வேலாயுதம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். தமுஎகச மாவட்டப் பொரு ளாளர் மானுடன் நன்றி கூறினார்.