நாடுகளுக்கு இடையே நட்பை வளர்க்கும் பாண்டாக்கள்
ஒரு ஜோடி பாண்டாக்கள் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு பயணம் சென்றுள்ளன. அங்கு அவை பராமரிக்கப்படும். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு நட்புறவு ஒப்பந்தத்தின்படி இந்த அழகிய உயிரினங்கள் அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ விலங்கு காட்சிச் சாலைக்கு சென்று குடியேறவுள்ளன. சிச்சுயான் மாகாணத்தை (Sichuan province) சேர்ந்த யெங் சுவான் (Yun Chuan) மற்றும் ஜின் பாவ் (Xin Bao) என்ற இந்த பாண்டாக்களை சந்திக்க சாண்டியாகோ காட்சிச் சாலை பராமரிப்பாளர்கள் சமீபத்தில் சீனாவிற்கு சென்றனர். யெங் நன்கு பழகும் குணமுடைய ஐந்து வயது ஆண் பான்டா. இதற்கும் சாண்டியாகோ காட்சிச் சாலைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. இதன் தாய் ஜென் ஜென் (Zhen Zhen) 2007ல் யெங் (Yun) மற்றும் கௌ கௌ (Gao Gao) ஆகியோருக்கு பிறந்தது. ஜின் பாவ் இனிய வட்ட முகமுடைய நான்கு வயது பெண் பாண்டா. ஜெண்ட்டிலாக பழகும் குணம் இதன் சிறப்பு. “இந்த இரு பாண்டாக்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட ஆளுமை, சிறப்பு பண்புகளை சீன அதிகாரிகள் எங்களுக்கு அனுப்பிவைத்தனர். என்றாலும் பாண்டாக்களை நேரில் சென்று சந்தித்தது ஒரு இனிய அனுபவம்” என்று சீன அமெரிக்க சாண்டியாகோ காட்சிச் சாலை கூட்டமைப்பின் துணை இயக்குனர் டாக்டர் மெஹனோயின் (DrMegan Owen) கூறுகிறார். கரடி வகையைச் சேர்ந்த இந்த அற்புத உயிரினங்களை அழியாமல் பாதுகாக்க உலக மக்கள் ஒன்றிணைந்து முயல்வது மகிழ்ச்சி தரும் செய்தி என்று சூழல் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீனாவிற்கும் அமெரிக்கா சாண்டியாகோ காட்சிசாலைக்கும் இடையில் பாண்டாக்களை நட்புரீதியில் பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கை முப்பதாண்டு ஒப்பந்தம், புரிந்துணர்வின் அடிப்படையில் செயல்படுகிறது. சீனாவில் உள்ள சூழல் நிறுவனங்கள் அந்நாட்டின் ராட்சச பாண்டாக்களையும் அவற்றின் வாழிடமாக திகழும் மூங்கில் காடுகளையும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வருகின்றன. அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களை குறிப்பாக பாண்டாக்களை பாதுகாப்பதில் சீனா ஆற்றி வரும் செயல்கள் உலகிற்கே ஒரு முன் மாதிரியாக விளங்குகிறது. சீனாவில் இருந்தான இவற்றின் அமெரிக்கப் பயணத்தின்போது விரிவான பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டு இவை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கப்பட்டன. சீன தலைவர் உட்பட பல தலைவர்களும் விலங்கு நல செயல்பாட்டாளர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவின்போது மூங்கில்கள், சோளப்பயிரில் இருந்து செய்யப்படும் சிறப்பு வகை சீன உணவு போன்ற இந்த விலங்குகளுக்கு பிடித்தமான அம்சங்கள் வழங்கப்பட்டது. இப்போது மகிழ்வுடன் சாண்டியாகோ காட்சிச்சாலையில் வாழ்ந்துவரும் இந்த பாண்டா ஜோடி உலக நாடுகளுக்கு இடையில் நட்பையும், நல்லுறவையும், அமைதியையும் பரப்பும் தூதுவர்களாக வாழ்ந்துவௌர்கின்றனர்.
யுரேனிய மாசு
இது பற்றிய ஆய்வுக்கட்டுரை பீனாஸ் நெக்சஸ் (PNAS Nexus ) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. டர்ட்டில் மற்றும் டார்ட்டாஸ் அடங்கிய உயிரினங்களில் செலோனியன்ஸ் (chelonians) என்ற ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினத்தின் மேலோட்டில் யுரேனிய மாசு படிந்துள்ளது. இந்த ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அணுஆயுத நிர்மாணம், பரிசோதனைகள் மற்றும் உற்பத்தி போன்றவை அதிகரித்துள்ளன. இந்நிலையில் அணுப் பரிசோதனைகள் நடந்த இடங்களில் வாழும் செலோனியன்ஸ் போன்ற உயிரினங்களின் வாழ்நாள் அனுபவங்கள் அணுக்கழிவு மாசு பற்றிய தகவல்களை தருகின்றன என்பதால் அவற்றின் மேலோடு பற்றிய இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அணுக்கழிவின் அளவை அறிய வழக்கமாக கெரட்டின் (keratin) என்ற கடினமான பொருளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயிரினங்களின் ஸ்க்யூட் (scute) என்று அழைக்கப்படும் மேலோடு ஆராயப்பட்டது. இந்த மேலோடு பகுதி வலுவற்ற எலும்புகளால் ஆனது. இதில் காணப்படும் ஒவ்வொரு அடுக்கும் அந்த உயிரினத்தின் ஓராண்டு கால வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும். அதனால் இவை வாழும் பகுதியை சுற்றி நடந்த சம்பவங்களை இதன் மூலம் அறியலாம். இயற்கை வரலாற்று சேகரத்தில் இருந்து ஐந்து வகை செலோனியன்ஸ் உயிரினங்களின் மேலோடுகள் ஆராயப்பட்டன. இவற்றில் ஒரு உயிரினம் பசிபிக்கில் உள்ள என்விடாக் அடால் (Enewetak Atoll) என்ற பகுதியில் இருந்து 1978ல் சேகரிக்கப்பட்டது. இப்பகுதி மற்றும் அதன் அருகாமைப்பகுதியான பிக்கினி அடால் (Bikini Atoll) ஆகிய இடங்களில் 67 அணுப் பரிசோதனைகள் நடைபெற்றன. பிக்கினி அடால் பகுதியில் 1954ல் நடந்த ஹைடிரஜன் குண்டு பரிசோதனையின்போது நாம் (Nam) என்ற தீவூ முற்றிலுமாக அழிக்கப்பட்டது. என்விடாக் அடாலில் 47 அணுப் பரிசோதனைகள் நடந்தன. இந்த கடலாமை அணுப் பரிசோதனை நடந்தபோது உயிருடன் இல்லை. என்றாலும் அணுப் பரிசோதனைகள் இங்கு நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருபது ஆண்டுகள் கழிந்தபிறகும் இதன் மேலோட்டில் யுரேனியம் மாசு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இப்பகுதிகளில் வாழும் பாசிகள் மற்றும் பிற உயிரினங்களில் இருந்து கழிவுகள் இந்த ஆமையின் உடலில் யுரேனியம் மாசை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். யு. எஸ். டென்னசி ஓக் ரிட்ஜ் (Oak Ridge) என்ற இடத்தில் இருந்து ஈஸ்ட்டர்ன் பாக்ஸ் வகை ஆமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இங்கு 1943ல் இருந்து யுரேனியம் உற்பத்தி செய்யப்பட்டு செறிவூட்டப்படுகிறது. ஆய்விற்குட்படுத்தப்பட்ட ஆமை 1962ல் இங்கிருந்து சேகரிக்கப்பட்டது. இதன் உடலில் யுரேனிய அணுக்கழிவு மாசுகளால் உருவான கதிரியக்கத்தன்மையுடைய மூலக்கூறுகள் மற்றும் பொருட்கள் படிந்திருப்பது தெரியவந்தது. கதிரியக்கக் கூட்டுப்பொருட்கள் இப்பகுதி ஆமைகளின் உடல் மேலோட்டில் உள்ள ஸ்குயூட் எலும்புகள் உள்ள பகுதியில் யுரேனியத்தின் ஐசோடோப் கூட்டுப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதனால் ஏற்படுத்தப்படும் கதிரியக்கத்தன்மையுடைய மூலக்கூறுகள் நேரடியாக அல்லது இப்பொருட்கள் நிறைந்துள்ள சூழலில் இருந்து இத்தகைய உயிரினங்களின் உடலில் படிவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஆமைகள் நீண்டகாலம் உயிர் வாழ்பவை. மனிதச்செயல்களால் நடத்தப்படும் அணுப் பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் இவற்றின் உடலில் நீண்ட காலம் பதிவு செய்யப்படுகிறது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சேகரங்கள் மற்றும் நவீனகால மாதிரிகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்து இவ்வகை உயிரினங்களை ஆராய்வதன் மூலம் பெருகிவரும் அணுக்கழிவு மாசுகள் பற்றிய துல்லியமான தகவல்களை நம்மால் பெறமுடியும். இது போன்ற ஆய்வுகள் காலநிலை மாற்றங்கள் தீவிரமாக மனிதகுலத்தை பாதித்துவரும் இன்றைய நிலையில் சூழலை கண்காணிக்க பேருதவியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அணுக்கழிவு மாசைக் கண்டறிய உதவும் ஆமைகளின் மேலோடு
ஆமைகளின் மேலோடு அணுக்கழிவு மாசின் அளவு பற்றி அறிய உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டர்ட்டில் (turtle) மற்றும் டார்ட்டாஸ் (tortoise) ஆமை வகைகளில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. அணுப் பரிசோதனைகள் நடந்த இடங்களில் வாழும் இவற்றின் மேலோடுகள் அணுக்கழிவு மாசின் அளவை அறிய உதவுகின்றன. ஆமைகள் டர்ட்டிள் (turtle) மற்றும் டார்ட்டஸ் (tortoise) என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. எல்லா டார்ட்டச்களும் டர்ட்டிள்களே. ஆனால் எல்லா டர்ட்டிள்களும் டார்ட்டஸ்கள் இல்லை. உடலின் முதுகுப்பகுதியில் ஓடுடன் இருக்கும் ஊர்வனவகையைச் சேர்ந்த எல்லா விலங்குகளையும் பெரும்பாலோர் டர்ட்டிள்கள் என்றே அழைக்கின்றனர். ஆனால் இந்த தனிச்சிறப்புமிக்க இரு உயிரினங்களுக்கும் இடையில் பல வேற்றுமைகள் உள்ளன. டார்ட்டஸ்களின் முகம் டர்ட்டிள்களைவிட கூடுதலான வட்டவடிவில் குழிந்த அமைப்புடன் காணப்படுகிறது. டர்ட்டிள்களின் முகம் மெலிந்து அதன் ஓடு நீரில் நன்கு நீந்துவதற்கேற்றவாறு அமைந்துள்ளது. டார்ட்டச்கள் பெரும்பாலான நேரத்தை நிலப்பகுதியிலேயே செலவிடுகின்றன. டர்ட்டிள்கள் நீரில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன. டார்ட்டஸ்களின் உடல் எடை அதிகம். அளவில் பெரியவை என்பதால் இவற்றின் முன் மற்றும் பின்னங்கால்கள் சிறப்பு அமைப்பைப் பெற்றுள்ளன. அதிக உடல் எடையை சுமக்க இந்த அமைப்பு அவற்றிற்கு உதவுகிறது. டர்ட்டிள்கள் விரலிடைச் சவ்வுகளுடன், தட்டையான, பரந்துவிரிந்த அமைப்புடன் உள்ள கால்களைப் பெற்றுள்ளன. இது அவை நன்கு நீரில் நீந்த உதவுகிறது. மர வளையங்கள் பூமியின் காலநிலையை அறிய உதவுகின்றன. பனிப்பாறைகளின் ஆய்வு கடந்த காலத்தில் புவியில் நிலவிய வெப்பநிலையைப் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. இதுபோல ஆமைகளின் மேலோடு வெவ்வேறு காலப்பதிவுகளின் கண்ணாடியாகப் பயன்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பதிவுகளில் கதிரியக்கத்தன்மையுடைய அணுக்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.