பஞ்சாலைத் தொழிலாளர் மாநில மாநாடு
தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் 9-ஆவது மாநில மாநாடு, திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தில் உள்ள வி.பி.சிந்தன் நினைவகத்தில் செவ்வாயன்று துவங்கியது. சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்தார். மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநிலத் தலைவர் எம்.சந்திரன், பொதுச் செயலாளர் எம்.அசோகன், பொருளாளர் எஸ்.சக்திவேல், சிஐடியு மாநில உதவித் தலைவர் கே.ஆர்.கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். (செய்தி : பக்கம் 3)