tamilnadu

img

ஜனநாயக மாதர் சங்க தலைவராக பி.கே.ஸ்ரீமதி தேர்வு

திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபின் நகர்), ஜன. 9 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக கேரள முன்னாள் அமைச்சர் பி.கே.ஸ்ரீமதி, பொது செயலாளராக மரியம் தாவ்லே, பொருளாளராக எஸ்.புண்ணியவதி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். உ.வாசுகி, சுதா சுந்தரராமன் ஆகியோர்  துணை தலைவர்களாகவும், பி.சுகந்தி  செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்ட னர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரம் தாகூர் திரையரங்கில் (எம்.சி.ஜோசபின் நகர்) ஜனவரி 6 முதல் 9 வரை எழுச்சியோடு நடைபெற்றது. பிரதிநிதிகள் மாநாட்டில் திங்களன்று 83 பேர் கொண்ட மத்தியக்குழுவும் அதன் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அகில இந்திய தலைவராக பி.கே.ஸ்ரீமதி தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக மரியம் தாவ்லே, பொருளாளராக எஸ்.புண்ணியவதி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

துணை தலைவர்களாக சுபாஷினி அலி, மாலினி பட்டாச்சார்யா, ரமா தாஸ், உ.வாசுகி, சுதா சுந்தரராமன், ஜகனாரா கான், கே.கே.சைலஜா, சதிதேவி, சூசன் கோடி, பி.கே.ஜைனபா, கீர்த்தி சிங், ரம்பரி, தேபோலினா ஹெம்ப்ராம், ரமானி தேப் பர்மா, ஜக்மதி சங்வான் ஆகிய 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளர்களாக கிருஷ்ணா ரக்சித், சி.எஸ்.சுஜாதா, என்.சுகன்யா, ரமா தேவி, தபசி பிரகராஜ், ஜர்னா தாஸ், கனினிகா கோஷ், ஆஷா சர்மா, பி.சுகந்தி ஆகிய 9 பேரும், துணை செயலாளர்களாக மது கார்க், நியாதி பர்மன், டி.தேவி, மல்லு லட்சுமி, சவிதா, பிராச்சி ஹதில்கர், அர்ச்சனா பிரசாத் ஆகிய 7 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.