tamilnadu

img

ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படம்

ஆதிவாசி மக்களின் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துக!

தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் (“THE ELEPHANT WHISPERERS”) என்ற குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. பழங்குடி சமூகத்தைச் சார்ந்த பெள்ளி, பொம்மன் ஆகிய இருவரும் யானைக் குட்டிகளை தங்கள் குழந்தை களைப் போல வளர்த்தெடுக்கும்  தனித் திறமையை இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது. இயக்குனர் மற்றும் தயாரிப் பாளருக்கு பாராட்டுக்கள். இது போன்ற பல்வேறு தனித்திறமைகளையும், பாரம்பரிய அறிவையும் கொண்டிருப்ப வர்கள் ஆதிவாசி மக்கள். அந்த அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதற் கான நடவடிக்கைகளை ஒன்றிய மாநில ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் பெ.சண்முகம்

சென்னை, மார்ச் 15 - தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் காட்டுநாயகன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த யானைப் பாகன் தம்பதியான பொம்மன் - பெள்ளியின் உண்மைக் கதை யை வெளிக்கொண்டு வந்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, அத்தம்பதியை தமிழ்நாடு அரசு புதனன்று கவுரவித்தது. இதையொட்டி இந்த தம்பதி முதன் முதலாக நீலகிரி மலையில் இருந்து சென்னை மாநகருக்கு வந்தனர். சென்னையில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதியை அழைத்து இருவருக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டி கவு ரவித்தார். அத்துடன் ஒரு லட்சம் ரூபாய்க் கான காசோலையையும் அவர் வழங்கினார். முதுமலை யானைகள் காப்பகத்தில் பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் பொம்மன், பெள்ளி தம்பதியர், இதுவரை நீலகிரி மலையைத் தவிர பிற வெளியூர் களுக்கு அதிகம் சென்றதில்லை என்றும் முதன் முறையாக சென்னைக்கு வந்து முதல் வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது மிக வும் வியப்பைத் தந்ததாகவும் தெரிவித்தனர். பொம்மனும் பெள்ளியும், தங்களது வாழ்க்கை கதையை ஆவணப்படமாக உலக மக்கள் பலரும் பார்த்துள்ளதை அறி ந்து மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்தனர். “நாங்கள் யானை குட்டியை வளர்த்த  கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க் கிறார்கள். மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நக ருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை’’ என்று அவர்கள் கூறினர். தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இவர்கள் எப்படி பராமரித்தனர் என்பதை மையமாகக் கொண்டதுதான் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். 

“ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று  எங்களுக்கு தெரியாது. நாங்கள் யானை யை எப்படி பராமரிக்கிறோம் என்று அவ்வப்போது வந்து படம் எடுப்பார்கள், அதுதான் படமாக வரப்போகிறது, அந்த படத்திற்கு விருது கிடைக்கப்போகிறது என்று அப்போது தெரியாது. இந்த படம்  விருது பெற்ற பின்னர், எங்களைப் போன்ற யானை பராமரிப்பாளர்களின் வாழ்க்கை யைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள் கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி’’ என்கிறார் பெள்ளி. பொம்மன், பெள்ளியை கவுரவித்தது டன், முதுமலை மற்றும் தெப்பக்காடு யானை காப்பகத்தில் உள்ள 91 பணியாளர் களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கப் படும் என்றும் யானை பராமரிப்பாளர் களுக்கு புதிய வீடு கட்டுவதற்கு ரூ. 9.10  கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.