ஈஃபிள் கோபுரத்தை சுற்றி உள்ள பகுதிகளை விரிவாக்கம் செய்ய பாரீஸ் நகரசபை முடிவுசெய்துள்ளது. ஆனால், அது கொண்டுவந்துள்ள திட்டத்துக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து சில விரிவாக்கப் பணியினை மேற்கொள்ள பாரீஸ் நகரசபை தீர்மானித்துள்ளது. இதில் ஈஃபிள் கோபுரத்தைச் சுற்றி உள்ள நூற்றாண்டு கால மரங்கள் சிலவற்றை வெட்டுவதும் அடங்கியுள்ளது. இந்த திட்டத்தை பாரீஸ் நகரசபை அறிவித்த நாள் முதல் பல்வேறு மட்டத்தில் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், பாரீஸ் காவல்துறை தலைமை அதிகாரி டிடியர் லல்லமெண்ட் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதி பாரீஸ் நகரசபைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். பாரீஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த கடிதத்தில், ‘இந்த விரிவாக்கல் திட்டத்துக்கு தாம் முற்றுமுழுதாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இந்த திட்டத்தினால் பாரீசில் பாரிய வீதி போக்குவரத்து நெரிசல் ஏற்படும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாமும் தெரிந்து கொள்வோமே!
K2 என்றால்...
இது இரத்தப் பிரிவோ, வைட்டமினோ அல்ல. உலகத்திலேயே உயரமான மலைகளில் இரண்டாவது மலை!. இதுவே ‘K2’ என்றழைக்கப்படுகிறது.! இது இந்தியாவின் உச்சியில் காரகோரம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் உயரம் 8614 மீ> இந்த மலையில் முதன் முதலாக 1954-ல் (RDITO DESIO) இ அர்டிடோ டெசியோ என்பவர் காலடி வைத்தார். இதன் உயரம் 8611 மீட்டர் { 28251 அடி } [ எவரெஸ்டின் உயரம் 9848 மீட்டர் !. வரைபடத்தில் பார்க்கும்போது k2-வை விட எவரெஸ்ட் இருப்பது தாழ்வான பகுதி போலிருக்கும். ஆனால், எல்லா உயரங்களும் கடல் மட்டத்திலிருந்து கணக்கிடப்பட்டதாகும்.! K2 மலை ‘குட்வின் ஆஸ்டன்’ என்றும் அழைக்கப்படுகிறது. {கஞ்சன் ஜங்கா 8598 மீ) ஏசிஎஸ்.மணி, மதுராந்தகம்.