tamilnadu

img

மதுபான கடைகளை திறக்க எதிர்ப்பு குடைபிடித்து மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர்

மதுரை, மே 6-  தமிழக அரசு மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறப்ப தற்கு ஏற்பாடுகளை செய்து வரு கின்றது.  கொரோனா நோய் பரவல் காரண மாக மதுரை மாவட்டம் சிவப்பு மண்ட லம் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறி விக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் மதுபானகடையினை திறப்ப தால் குடும்ப வன்முறைகள் அதி கரிக்கும்.மேலும் சமூக விரோதச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பு களும் அதிகரிக்கும். மதுபான கடை க்கு வரும் மதுப் பிரியர்கள் சமூக இடை வெளியை பின்பற்றாமல் நிற்பார்கள்.

இதனால் மதுரை மாவட்டத்தில் மது பான கடை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க கூடாது என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதனன்று மாவட்ட ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.  இதில் மாவட்ட தலைவர் பி.கோபி நாத் தலைமையில், மாநிலச் செயலா ளர் எஸ். பாலா , மாவட்ட செயலாளர் டி. செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் ஜெ. பார்த்தசாரதி, மாவட்ட நிர்வாகி கள் சரண், பாவல் சிந்தன், நவீன் உள்ளிட்ட பலர்  நூதன முறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகை யில் குடைகள் பிடித்துக் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி
டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர்  நகரின் பல்வேறு பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றியும் கோரிக்கை பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;