tamilnadu

img

ரூ. 21.63கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு

சென்னை, டிச. 1- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங் ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் அரசினர் தொழிற் ்பயிற்சி நிலையங்களில் 21 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட் ்டுள்ள வகுப்பறைகள், பணிமனை கட்டடங்கள் மற்றும் விடுதி கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 50,721 உறுப்பினர்களுக்கு 12 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31,478 பயனாளிகளுக்கு, 6,35,64,950, மாதாந்திர உதவித்தொகை 17,338 பயனாளிகளுக்கு, 1,78,9800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் தலைமைச் செயலாளர் இறை யன்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.