tamilnadu

img

காவல்துறை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு? சடலத்துடன் மக்கள் மறியல்

மதுரை, ஏப்.6- மதுரை கருப்பாயூரணியில் கோழிக்கடை நடத்தி வந்தவர்   அப்துல் கரீம் (75) இவர் திங்களன்று காலை கடையின் வெளியே உள்ள கூண்டில் கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வந்துள்ளார். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் தடையை மீறி கோழிக்கடையை திறக்க வந்ததாக எண்ணி அப்துல் கரீம் மற்றும் அவரது மருமகன் ஷாஜகான் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது, இதில்  அப்துல் கரீம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடலை மதுரை - சிவகங்கை சாலையில் வைத்து  உறவினர்கள், கருப்பாயூரணி பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறை உயரதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உடலை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர், இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது "ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் யாரும் சாலையில் நிற்க வேண்டாம் என மட்டுமே காவல்துறை அறிவுறுத்தியது. உடல்நலக் குறைவால் தான் அப்துல் கரீம் உயிரிழந்தார் என்றனர். இந்நிலையில் அப்துல் கரீம்  மகன் முஹமது சேட் தனது தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகவும், உடலை உடற்கூராய்விற்கு உட்படுத்த வேண்டாமெனவும் கடிதம் கொடுத்துள்ளார். அப்துல் கரீம்  மருமகன் ஷாஜகான் காவல்துறைக்கு கொடுத்துள்ள கடிதத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த என்னை தாக்கிய காவலர் கணேசன் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

;