தஞ்சாவூர், பிப்.12-- கிலாபத் இயக்கத்தை சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாவா பக்ருதீன் என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய் யப்பட்டு புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவர்களிடம் நடத்திய விசாரணை யின் அடிப்படையில், கிலாபத் இயக் கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ் சாவூர் கீழவாசல், தைக்கால் தெருவை சேர்ந்த அப்துல் காதர் (49), முகமது யாசின் (30), காவேரி நகரைச் சேர்ந்த அகமது(37) ஆகியோரது வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரி கள் பிப்ரவரி 12 சனிக்கிழமை சோதனை நடத்தினர். இதில், மூன்று பேரின் செல்போன் கள், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்கா ளர் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் பறிமுதல் செய்தனர். சோதனை நடத்துவதைக் கண் டித்து அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லா மிய பெண்கள், ஆண்கள், இளைஞர் கள் திரண்டு முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர். சோதனை தொடர்பாக அப்துல் காதர் கூறுகையில், என்னிடம் உள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். எதுவுமே கைப்பற்றவில்லை. என்னு டைய செல்போன், ஆதார் கார்டு, வாக் காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகளை பறி முதல் செய்துள்ளனர்.என்னிடம் இருந்த சிவில் கேஸ் தொடர்பான ஆவணங்களையும் எடுத்துச் சென் றுள்ளனர் என்று தெரிவித்தார்.