முன் விரோதத்தில் இளைஞர் அடித்துக் கொலை
நரிக்குடி, ஜூன்.5- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே கண்டு கொண்டான் மாணிக்கம் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டார். நரிக்குடி அருகே உள்ளது கண்டுகொண்டான் மாணிக் கம். இக்கிராமத்தைச் சேர்ந்த வர் திருமுருகன்(35). இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து கோவில் ஒன்றை கட்டி வருகிறார். அந்த இடத் திற்கு எதிரே தவமுருகன்(45) என்பவரின் இடம் உள்ளது. இதனால், இ.ருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதையடுத்து, முரு கன் என்பவரின் வைக்கோல் படப்பில் தீ வைக்கப்பட்ட தாம். இதனிடையே இரு தரப்பினரிடையே வாக்குவா தம் ஏற்பட்டது. அப்போது தவ முருகன் அவரது மனைவி, மஞ்சுளா மற்றும் மகா லட்சுமி ஆகியோர் சேர்ந்து திருமுருகனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயமடைந் துள்ளார். பின்பு, சிசிச்சைக் காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திருமுருகன் உயிரிழநதார். இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருட்டு
தூத்துக்குடி, ஜூன் 5- தூத்துக்குடி அருகே மில்லில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பி லான பட்டாணி மூடைகள் திருடு போனது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி போல்பேட்டை மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையா மகன் கருப்பசாமி (62). இவர் புதியம் புத்தூர் அருகே அரசரடி பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். அங்கு வைத்திருந்த 50 கிலோ எடை யுள்ள 85 பட்டாணி பருப்பு மூடை களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டார்க ளாம். இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 46 ஆயிரத்து 500 ஆகும். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
போக்சோ சட்டத்தில் இருந்து தப்பிக்க விஷம் அருந்திய வாலிபர் கைது
சாத்தூர்,ஜூன்.5- சிறுமியை ஏமாற்றிக் கடத்திச் சென்ற வாலிபர், போலீசாரிடமிருந்து தப்பிக்க விஷம் குடித்ததாக நாடகம் ஆடியது பரிசோதனையில் தெரிய வந்தது. மதுரை மாவட்டம் டி. குன்னத்தூர் அருகே உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த சின்னகாளை மகன் ஐயர்(23). இவர் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி யிடம் ஒரு வருடமாக செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்தநிலையில் சிலதினங்களுக்கு முன்பு அம்மாணவியை அவர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் காரைக்கால் அருகே சென்ற ஐயர் மற்றும் மாணவியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்பு, போலீசார் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது ஐயருக்கு தெரிய வந்தது. எனவே, அந்த வழக்கி லிருந்து தப்பிக்க தான், பூச்சி மருந்தை குடித்ததாக போலீசாரிடம் தெரி வித்துள்ளார். இதையடுத்து, மருத்து வர் மூலம் போலீசார் ஐயரை பரிசோதனை செய்தனர். இதில் விஷம் அருந்தியது போல அவர் நாடகம் ஆடி யது தெரிவந்தது. பின்னர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ஐயரை போலீசார் கைது செய்தனர்.
கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
சாத்தூர் ,ஜூன்.5- சாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சாத்தூர் அருகே நத்தத் துப்பட்டியைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான கொய்யாத் தோப்பு உள்ளது. அங்குள்ள காட்டுப் பகுதி யில் புள்ளி மான்கள் நட மாட்டம் அதிகமாக உள்ளது. இந்தநிலையில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரி வித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அதி காரி கதிரேசன் தலைமை யிலான தீயணைப்பு வீரர் கள். புள்ளிமானை உயிரு டன் மீட்டனர். பின்பு, திரு வில்லிபுத்தூர் வனவர் மாடசாமி,வன காவலர் முத்து ராமலிங்கம் ஆகியேரிடம் ஒப்படைத்தனர். பின்பு, கால்நடை மருத்துவர்கள் புள்ளிமானிற்கு சிகிச்சை அளித்து திருவில்லிபுத்தூர் வனப் பகுதியில் விட்டனர்.
பொது முடக்க காலத்தில் கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகள் : கண்டித்து மாணவர் சங்கம் போராட்டம்
விருதுநகர், ஜூன்.5- பொது முடக்க காலத்தில் தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரி டம் கட்டாய கட்டண வசூலில் ஈடு பட்டு வருகின்றனர். இதனைக் கண்டித்தும், கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும். இணைய தள வசதி முழுமையாக கிடைத்த பின்பே மாணவர்களுக்கு அதன் மூலம் பாடம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.சமயன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் கே.மாடசாமி பேசினார். முடிவில் மாநிலக்குழு உறுப்பினர் பி.பிரசாந்த் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், ஹரிராஜ், கிசோர் நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.