tamilnadu

சரக்கு போக்குவரத்து தலைநகரமாக நாக்பூர்: ஒன்றிய அமைச்சர் பேச்சு

நாக்பூர்,அக்.23- மகாராஷ்டிரா  மாநிலம் நாக்பூரில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைய உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுக டிரஸ்ட் இடையேயான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒன்றிய  சாலைப்போக்குவரத்து-நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி கையெழுத்திட்டார்.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், நாக்பூரில் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டால்  நாட்டின் சரக்கு போக்குவரத்து  தலைநகரமாக நாக்பூர் உருவாகும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தெரிவித்தார். பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து, பின் பேக்கேஜ் செய்து பல்வேறு இடங்களு க்கு கொண்டு செல்லும் இடமாக பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமையும். இந்த பூங்கா வில் குளிர் சேமிப்பு கண்டெய்னர்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைய உள்ளன. இதனால் காய்கறிகள் மற்றும் பழங்களை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும். மேலும், விளை பொருட்களை மலிவான தளவாட செலவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்று வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர், பெங்களூரு,  சூரத், மும்பை, இந்தூர், பாட்னா, ஐதராபாத், விஜய வாடா, மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்ப தற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. சென்னை துறைமுகம் பகுதி யில் பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

;