tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலின் வெற்றிக்கு உழைப்போம்!

மும்பை 288 தொகுதிகளைக் கொண்ட மகா ராஷ்டிராவில் நவம் பர் 20 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்ட ணிக் கட்சிகளின் தொகுதி உடன் பாடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எம்விஏ கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து உறுதியான முடிவுடன் ஒரு சில தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளன. அவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் எம்விஏ கூட்டணிக் கட்சித் தலை வர்களின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின் றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு சட்டமன்ற தொகு தியில் 26 அக்டோபர் அன்று மகா  விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்ட ணிக் கட்சிகளின் மாநாடு நடை பெற்றது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், தஹானு சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான வினோத் நிகோல், தேசியவாத காங்கிரஸ் (சரத்) விக்ரம்காட் எம்எல்ஏ, சுனில் புசாரா, சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய்  பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பாட்டீல், உழைப்பாளர் சங்க தலைவர் பிரையன் லோபோ, பாரத் ஜோடோ அபியான் தலை வர் ரமாகாந்த் பாட்டீல் மற்றும் சிபிஎம் மாவட்ட  தலைவர்கள் கிரண் கஹாலா, ரட்கா கலங்டா, லக்ஷ்மன் டோம்ப்ரே, லஹானி தௌடா ஆகி யோர் இந்த மாநாட்டில் பங் கேற்று உரையாற்றினர்.

ஒன்றுபட்டு உழைப்போம்

எம்விஏ கூட்டணிக் கட்சிகளின் ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் தொடர்ந்து வினோத் நிகோல் தஹானு சட்ட மன்ற தொகுதியின் வேட்பாளராக (எம்விஏ கூட்டணி) மீண்டும் அறி விக்கப்பட்டார். அதன்பிறகு வினோத் நிகோலின் வெற்றிக்கு ஒன்றுபட்டு உழைப்போம் என எம்விஏ கூட்டணிக் கட்சித் தலை வர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முழங்கினர். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அக்டோபர் 27 அன்று தஹானு தொகுதிக்கான தேர்தல் பிரச்சார வியூக கூட்டம் தலசாரியில் உள்ள தோழர் கோதாவரி தோழர் சம்ராவ் பருலேகர் பவனில் நடைபெற்றது. சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள், வெகுஜன அமைப்புகள் என 500க்கும் மேற்பட்ட முன்னணி செயல்பாட்டாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சிபிஎம் வேட்பாளர் வினோத் நிகோலுக் காக இரண்டு வகையான ஒரு  லட்சம் கவர்ச்சிகரமான தேர்தல்  துண்டுப்பிரசுரங்கள் அச்சிடப்பட் டுள்ளன. இந்த தேர்தல் துண்டு பிர சுரங்களை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எளி மையான மக்கள் சந்திப்பு மூலம் விநியோகிக்க முடிவு எடுக்கப் பட்டது. உள்ளூர் பொதுக் கூட்டங்கள் மற்றும் பிற வகை யான பிரச்சார வடிவங்கள் தொ டர்பாக பல்வேறு முடிவுகளும் எடுக் கப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவினைத் தொடர்ந்து திங்க ளன்று தேர்தல் துண்டுப்பிரசுரங் கள் மக்களிடம் விநியோகித்து, சிபிஎம் வேட்பாளருக்கு வாக்கு கேட்கும் பணியை சிபிஎம் ஊழியர் கள் துவங்கினர்.

1.07 லட்சம் உறுப்பினர் சேர்க்கை

சமீபத்தில் சிபிஎம் மாவட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, மக்கள் தொடர்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பால்கர் மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் 1 லட்சத்து 7 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கை (அகில இந்திய விவ சாயிகள் சங்கம் - 51,000, மாதர் சங்கம் - 26,000, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் - 25,000, இந்திய மாணவர் சங்கம் - 5,000) நடை பெற்றது. இதே போல அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 75,000 அள வில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்க ளில் மாவட்டத்தில் சிபிஎம் வார இதழான ஜீவன்மார்க்கின் சீத்தா ராம் யெச்சூரி சிறப்பு இதழ் 4,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.