tamilnadu

img

எந்தப் பாத்திரத்தோடும் பொருந்திப் போகிறாள் அடுக்களையில் அம்மா - காசாவயல் கண்ணன்

எந்தப் பாத்திரத்தோடும்
பொருந்திப் போகிறாள்
அடுக்களையில் அம்மா
•••

ஒவ்வொரு செங்கலாய்
உதிர்கிறது
வீடு கட்டும் கனவு
•••

செவ்வாய் பெண்ணுக்கு
திரூமணத் தடை
பூமி தோஷம்
•••

விதைப் பெண்ணுக்கு
சுகப் பிரசவம்
பச்சிலைக் குழந்தை
•••

இடைநில்லா பேருந்தில்
இஷ்டத்துக்கு பயணிக்கிறது
பட்டாம்பூச்சி
•••

இளைப்பாற நிழற்பாய்
தலை சாய்க்க வேர்க்கால்
மரத்தடி தாய்மடி
•••

அப்பா போனபிறகு
அனாதையானது
மாத்திரை டப்பா
•••

வெயிலுக்கு
சூடுபிடிக்கிறது
குளிர்பான வியாபாரம்.
•••

குளிக்காமலேயே
உடைமாற்றிக்கொள்கிறது
துணிக்கடை பொம்மை.
•••

நேர்முகத் தேர்வுக்கு
முந்திய  நாளில்
மறைமுகத் தேர்வு.

காசாவயல் கண்ணன்

;