tamilnadu

img

இயற்கையின் மீது பெரும் யுத்தம் நடத்திய மோடி ஆட்சி -சூழலியலாளர் ஆர்.ஆர்.சீனிவாசன்

சமீப காலமாக இந்த பூவுலகு பயங்கரமாக அழிந்து கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் தொடர்ந்து அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த இருநூற்றாண்டுக்குள் பெரும் இயற்கை வளங்களை நிரந்தரமாக நாம் இழந்துள்ளதாக தெரிய வருகிறது. 60 சதவித உயிரினங்களை முற்றிலுமாக நாம் இழந்துள்ளோம்.”பருவ நிலை நெருக்கடியை” அறிவிக்க வேண்டிய காலக் கட்டத்தில் இருக்க வேண்டிய அரசு இதையெல்லாம் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் மேலும் உலகை அழிக்க பல திட்டங்களைத் தீட்டுகிறது மோடி அரசு.மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு எதிராக அமைதியாக ஒரு மாபெரும் யுத்தம் தொடங்கிவிட்டதை நம்மால் உணரமுடிகிறது.2006 வன உரிமைச் சட்டம் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக 2008ல் நடைமுறைக்கு வந்த இச்சட்டத்தில் ‘கிராமசபை’ முடிவு செய்யாமல் காட்டிற்குள் புகுந்து எந்தவொரு தொழிற்சாலையும் அமைக்கவோ, கனிமம் எடுக்கவோ முடியாது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கிராமசபை முடிவுகளுக்கு கட்டுப்படாமல் காடுகளை அழிக்க வழிவகுத்து செயல்பட ஆரம்பித்தது.தேசிய காட்டுயிர் அமைப்பின் (சூயவiடியேட றடைனடகைந bடியசன) தனித்துவமிக்க வல்லுநர்களின் அதிகாரங்களைக் குறைக்கும் செயல்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டது.


இது காடுகளினுள் சாலை போடுவது, காட்டை அழிப்பது போன்றவற்றை சட்டரீதியாகவும் மாற்றியது. நிலக்கரிச் சுரங்க நடைமுறைகளை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் இல்லாமல் நேரடியாகச் செயல்படுத்த புதிய முறைகளைக் கொண்டுவந்தது. இது அடிப்படையில் சட்டவிரோதமானது. அதேபோல், புதிய பாசனத் திட்டங்களையும் எந்தச் சுற்றுச்சூழல் விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் நேரடியாக அனுமதிக்கப்பட்டது.அதிகம் மாசுக்குள்ளான பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளை அழுத்தும் சுற்றுச்சூழல் விதிகளையும் தளர்த்தி தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக மாற்றிவிட்டனர். காடுகளின் தேசியப் பூங்காவின் உள்ளேயும் அதைச் சுற்றி 10 கி.மீட்டருக்குள்ளும் எந்தத் தொழிற்சாலையும் வரக்கூடாது என்பது நடைமுறை. ஆனால், நடுவண் அரசோ 5 கிலோ மீட்டருக்குள்ளேயே தொழிற்சாலைகள் வர அனுமதி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.காடுகள் பாதுகாப்புச் சட்டத்தையும் தளர்த்தி அழிவுக்கு வித்திட்டுவிட்டார்கள். நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (சூயவiடியேட ழுசநநn கூசiரெநே) பரிமாணங்களையும் முடக்குவதற்கான வேலையிலும் இறங்கி அதன் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தத் துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே நம்மிடம் இருக்கும் அனைத்து சுற்றுச்சூழல் சட்டங்களையும் மறுமதிப்பீடு செய்வதற்கும், அதை மாற்றியமைப்பதற்கும் புதிய சுற்றுச்சூழல் கமிட்டிகளையும் உருவாக்கியுள்ளனர். இது அச்சட்டங்களை மேம்படுத்துவதற்கு அல்ல; தொழிற்சாலைகளும், முதலாளிகளும் சுமூகமாக மேலும் பல தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்குத்தான்.


தேசப்பற்று, சுதேசி என்று பேசி இந்திய நாட்டையும் காட்டையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதற்கு ஏதுவான ஓர் அரசே இப்போது உள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனையான உணவிலும் தவறான முடிவையே எடுத்துள்ளது. மரபணு மாற்றுப் பரிசோதனைகள் வேண்டாம் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளும், விதைகளும் போதுமானது என்று பல்வேறு அறிஞர்களும் விவசாயிகளும் எடுத்துரைத்த பிறகும் அதை வேகமாக வயல்வெளிப் பரிசோதனைகளுக்கு அனுமதிப்பது இந்தியாவின் விவசாயத்தை அழிப்பது மட்டுமே குறிக்கோளாகும்.இதையெல்லாவற்றையும் விட ‘நில அபகரிப்புச் சட்டம்’ மக்கள் மத்தியில் மோடியின் உண்மையான முகத்தைக் காட்டியதோடு பா.ஜ.கவின் ‘நாட்டை விற்கும்’ திட்டத்தையும் மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.இந்தியாவில் 48.69 - 84.2 மில்லியன் ஹெக்டேர் பொதுச் சொத்தாகவும், இந்திய நிலபரப்பில் அது 15-25 சதவீதம் ஆகவும் உள்ளது. வருடத்திற்கு 5 பில்லியன் டாலர் பொதுச் சொத்து மூலம் ஏழை மக்களுக்கு ஊதியமாக கிடைக்கிறது. 77 சதவீதம் இந்திய கால்நடைகள் மேய்ச்சல் நிலங்கள் போன்ற பொதுச் சொத்துக்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. 55சதவீதம் பாலும் ,74 சதவீதம் இறைச்சியும் இந்த மேய்ச்சல் நிலங்களில் மேயும் கால்நடைகளில் இருந்து இந்திய மக்களுக்கு கிடைக்கிறது. ஆனால் பொதுச் சொத்து வருடத்திற்கு 1.9சதவீதம் சீரழிக்கப்படுகிறது என அரசின் புள்ளி விவரமும், 50 வருடங்களில் 31-55 சதவீதம் பொதுச் சொத்து அளிக்கப்பட்டுள்ளது என பிற ஆய்வுகளும் கூறுகிறது. 


இதனால் மண், நீர் ,உணவுச்சத்து வளம் குறைந்து, உணவு, குடிநீர், கால்நடை தீவனம் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.2013 புள்ளி விவரப்படி சூழல் சீர்கேட்டால் இந்தியாவிற்கு 3.75 ட்ரில்லியன் டாலர் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும், அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 5.7 சதவீதம் எனவும் உலக வங்கி ஆய்வுகள் கூறுகின்றன. காடுகளில் ஏற்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்தமட்டில் ஆகஸ்ட் 2014 ல் இருந்து அனுமதி கோரப்பட்ட 687 திட்டங்களில் வெரும் 5 திட்டங்கள் மட்டுமே இந்தியாவில் நிராகரிக்கப்பட்டுள்ளது அரசின் இச்செயல் காடுகளை பயன்படுத்தும் பழங்குடி இன மக்கள் மீது அரசு எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளது என தோலுரித்துக் காட்டுகிறது.காடுகளைப் பாதுகாக்கும் பழங்குடிகளை காட்டை விட்டு துரத்துவதை தங்களுடைய அடிப்படைக் கொள்கையாக வைத்திருக்கும் மோடி அரசை அகற்றுவது நம் தலையாய கடமை.

;