tamilnadu

img

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை உச்சரிக்க மோடிக்கு அருகதை உண்டா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின், 5 ஆண்டு கால மக்கள் பணிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம், கோவை சித்தாபுதூர் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது.  கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மற்றும் பி.ஆர்.நடராஜன் எம்பி., மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உரையாற்றினர்.

விசைத்தறிகளை விற்றுவிட்டு  ஜவுளித் தொழில்  எப்படி முன்னேறும்?

மோடி ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவின் சுதந்திரமும் ஜனநாயகமும் செத்த ஆண்டு கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சியும் விவசாயமும் மரணித்த ஆண்டுகள். இந்தி யாவின் அனைத்து மாண்புகளும் வீழ்ச்சி அடைந்த ஆண்டுகள். இந்தியாவின் இருண்ட காலம் என வரலாறு மோடி ஆட்சி யை பதிவு செய்யும். சாகசங்கள் மூலம்  இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்ற வர்கள் எதிர்வரும் தேர்தலில் தூக்கி எறியப்படுவார்கள்.  தூக்கம் வராமல் தவிக்கும் மோடி இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடி தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார். பிரதமரின் முகத்தில் தோல்வி வெளிப்படுகிறது. இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பிறகு ஜனநாயகம் உயிர் பெற்று எழும். இந்த நாட்டின் மீது பற்று கொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் பாஜகவை வீழ்த்த செயலாற்ற வேண்டும். சிறு, குறு தொழில்கள் அழிவு கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் இருந்த சிறு குறு தொழில்கள் அனைத்தும் நசுக்கப்பட்டு விட்டன. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து தொழில்களிலுமே வியாபாரம் குறைந்து வருகிறது. மோடி அரசாங்கம் தனது குடிமக்களை ஒவ்வொரு நாளும் ஏழையாக்கி வருகிறது. ஒவ்வொரு பொருட்களின் விலை உயரும் போதும் சாமானிய மக்கள் தொடர்ந்து ஏழையாக்கப்பட்டு வருகிறார்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் ஒவ்வொரு நாளும் மக்கள் தொடர்ந்து ஏழையாக்கப்பட்டு வருகிறார்கள். மோடி அரசில் ஏழை, எளிய மக்க ளுக்கு வழங்கக்கூடிய மானியங்கள் அனைத்தும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. மானியங்களை குறைப்பதன் மூலம் ஒவ்வொரு மாநில அரசையும் ஏழை யாக்கி பொருளாதார நெருக்கடியில் மூச்சுத் திணற வைக்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை கூட சரியாக ஒதுக்க மறுக்கின்ற னர். நாட்டின் எந்தப் பகுதியிலும் பாஜகவின் ஆட்சி நீடிக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது. 

விற்கப்படும் விசைத்தறிகள்

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி நாடும், நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைவதாக பேசிக் கொண்டிருக்கிறார். ஜவுளி தொழிலில் கொங்கு மண்டலம் செழிக்கப் போவதாக பல்லடத்தில் பிரதமர் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது. விசைத்தறிகள் அனைத்தும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி ஜவுளி தொழில் வளர்ச்சி பெறும்?  பி.ஆர்.நட ராஜன் போன்ற தோழர்களின் நேர்மை யையும், எளிமையையும், மக்கள் நல பணிகளையும் நாம் கொண்டாடாவிட்டால் வேறு யார் கொண்டாட முடியும்?  

சிபிஎம் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் ஆற்றிய உரையில் இருந்து

ஆதீனங்களை மிரட்டி பணம் பறிக்கும் பாஜக

பிரதமர் மோடி ஆதீனங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து செங்கோல் பெற்றுக் கொண்டார். மறுபுறம் தமிழ்நாட்டில் ஆதீனங்களை மிரட்டி பாஜகவினர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதேபோன்று, அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் மீதான அமலாக்கத்துறை வழக்குகளை ரத்து செய்ய 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ள 78 நபர்களின் விவரங்கள் இருந்ததாக செய்திகள் வந்தது. அமலாக்கத்துறை உயரதிகாரிகள் சொல்லாமல், அவர்களது பங்கு அதில் இல்லாமல் ஒரு சாதாரண அதிகாரிக்கு எப்படி லஞ்சம் கேட்க தைரியம் வரும்?  சுயேட்சையாக இயங்கக்கூடிய மத்திய அமைப்புகள் பாஜகவின் கைப்பாவையாக இருக்கும் சூழலில், அண்ணாமலை மேடை போட்டு லஞ்சத்தை ஒழிக்கப் போவதாக பேசுவது வேடிக்கையாக உள்ளது. 

பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசியதில் இருந்து...

பாஜக மற்றும் அதிமுகவினர் இந்தியா கூட்டணி பிளவுபடும் என்று காத்திரு ந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனது. தமிழகத்தில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி களையும் அரவணைத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. பெரும்பா லான கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதி களின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு விட்டது. நமது இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிக்கான பட்டியல் விரைவில் வெளியாகும். தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டிய பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்.  காலம் காலமாக ஒன்றாக இருந்த மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் வேலை யை பாஜகவினர் செய்து கொண்டிருக்கின்ற னர். இதுபோன்ற பாசிச மதவெறி சக்திகளை வீழ்த்த வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. தமிழகத்துக்கு வரும்போது பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முயற்சிக்கிறார். அதிமுக வுடன் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்க லாம். ஆனால் எம்ஜிஆர் மற்றும் ஜெய லலிதா மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்ததில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெய லலிதாவின் பெயரை உச்சரிப்பதற்கு தகுதி யற்ற நபர் மோடி.  .

சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்  என்.குணசேகரன் ஆற்றிய உரையிலிருந்து