tamilnadu

img

மூத்த குடிமக்கள் ரயில் பயணம் செய்வது 24 சதவிகிதம் சரிந்தது!

புதுதில்லி, நவ.28- ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடி மக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்  கப்பட்டு வந்தது. நீண்டகாலமாக நடைமுறை யில் இருந்துவந்த இந்த கட்டணச் சலுகை, நரேந்திர மோடி பிரதமரான பின்னர், கடந்த  2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கொரோனா காலத்தைக் காரணம் காட்டி ரத்து செய்யப் பட்டது. கொரோனா தொற்று அபாயம் நீங்கி,  ரயில்கள் இயக்கம் சீரான பின்னரும் கட்டணச்  சலுகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியபோது, “ரயில் பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்  பட்டால் அது ரயில்வே துறையைக் கடுமை யாகப் பாதிக்கும். ஆகவே, மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பு பயணிகளுக்குக் கட்ட ணச் சலுகையை நீட்டிப்பது இயலாத காரிய மாகும்” என்று  ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எழுத்துப் பூர்வமாக அளித்த பதி லில் தெரிவித்தார்.

இந்நிலையில்தான், கட்டணச் சலுகை ரத்து  செய்யப்பட்டதால், ரயில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 24 சதவிகி தம் அளவிற்கு சரிந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச்  சட்டம் மூலம் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு  ரயில்வே பதிளித்துள்ளது. அதில், “கடந்த 2018-19ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் 7.1 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்தனர். 2019- 20இல் இது 7.2 கோடியாக உயர்ந்தது. கொரோனா காலமான 2020-21இல் 1.9 கோடி  பேர் பயணித்தனர். 2021-22ல் 5.5 கோடி பேர் பய ணம் செய்தனர்” என்று தெரிவித்துள்ளது.  அதாவது, ரயில் பயணம் செய்யும் மூத்த குடி மக்களின் எண்ணிக்கை, சலுகை ரத்து கார ணமாக 24 சதவிகிதம் குறைந்து விட்டதை இந்த  புள்ளிவிவரம் வெளிக்காட்டியுள்ளது. ஆனால்,  கடந்த 2021-22-ஆம் ஆண்டில் பயணிகள் எண்  ணிக்கை குறைந்ததற்கு கொரோனா அச்சு றுத்தல்தான் காரணம் என ரயில்வே அதிகாரி கள் தெரிவித்து உள்ளனர்.  மூத்த குடிமக்களின் எண்ணிக்கை குறைந்  தது மட்டுமல்லாமல், அவர்கள் மூலமான ரயில்வேக்கு கிடைத்த வருவாயும் குறைந்து விட்டதை அரசு புள்ளிவிவரங்கள் காட்டியுள் ளன. கடந்த 2018-19இல் மூத்த குடிமக்கள் மூலம் ரூ.2 ஆயிரத்து 920 கோடி கிடைத்தது. இது  2019-20ல் ரூ.3 ஆயிரத்து 10 கோடி, 2020-21ல் ரூ.875 கோடி, 2021-22ல் ரூ. 2 ஆயிரத்து 598 கோடி  என குறைந்துள்ளது.

;