அக்டோபர் 7 அன்று, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் (மசாசூசெட்ஸ் மருத்துவப் பள்ளி) மற்றும் கேரி ருவ்குன் (மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனை மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி) ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மரபணு வெளிப்பாட்டின் முக்கிய ஒழுங்குபடுத்திகளாக மைக்ரோ ஆர்என்ஏக்களை (miRNAs) கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லிலும் உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகள் மரபணுத் தகவல்களை குரோமோசோம்களில் கொண்டுள்ளன. டிஎன்ஏவின் பகுதிகளான மரபணுக்கள், மெசஞ்சர் ஆர்என்ஏவாக மாற்றப்பட்டு, பின்னர் புரதங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு செல்லும் ஒரே குரோமோசோம்களை யும் மரபணுக்களையும் கொண்டிருந்தாலும், செல்களின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, தசை செல்கள் மற்றும் நரம்பு செல்கள் உள்ளன. 1980களில், சி.எலிகன்ஸ் என்ற வட்டப்புழு வில் ஆய்வு செய்த அம்ப்ரோஸ் மற்றும் ருவ்குன், lin-4 மற்றும் lin-14 மரபணுக்களின் செயல்பாடு களை கண்டறிந்தனர். lin-4 ஆனது lin-14-ஐ அடக்குவதை கண்டறிந்தனர், ஆனால் அது எவ்வாறு செய்கிறது என்பது தெரியவில்லை. பின்னர் அவர்களின் ஆய்வில், lin-4 ஆர்என்ஏ மூலக்கூறு lin-14 மெசஞ்சர் ஆர்என்ஏவுடன் இணைந்து, அதன் புரத உற்பத்தியை தடுப்பது கண்டறியப்பட்டது. இது குறுகிய ஆர்என்ஏ மூலக்கூறுகளைப் பயன்படுத்தி மரபணுக்களை கட்டுப்படுத்தும் புதிய முறையை வெளிப்படுத்தியது. முக்கிய கண்டுபிடிப்புகள் 1. மைக்ரோ ஆர்என்ஏக்கள் அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றன. 2.வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங் களுக்கு பதிலளிக்க உதவுகின்றன. 3. தசை வளர்ச்சி, நரம்பு செல் உருவாக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகின்றன. 4. தாய்ப்பாலிலும் இவை காணப்படுகின்றன. மருத்துவப் பயன்பாடுகள் u புற்றுநோய், இதய நோய்கள், நரம்பு சிதைவு நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்பட லாம். u நோய் கண்டறிதலுக்கும் பயன்படுத்தலாம், ஏனெனில் இவை இரத்தம், சிறுநீர் போன்ற உடல் திரவங்களில் நிலையாக உள்ளன. கவலைக்குரிய விஷயம் இந்த கண்டுபிடிப்பில் பங்களித்த பல பெண் விஞ்ஞானிகள் நோபல் பரிசிலிருந்து விடுபட்டுள்ளனர். 1901 முதல் 2024 வரை, மருத்து வத்துக்கான நோபல் பரிசுக்கு 13 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் துறைகளில் 653 பரிசாளர்களில் 65 பேர் மட்டுமே பெண்கள். இது அறிவியல் துறையில் நிலவும் பாலின பாகுபாட்டைக் காட்டுகிறது.
-எஸ். கிருஷ்ணசாமி பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக். 13, தமிழில் சுருக்கம் : ராகினி