tamilnadu

மானாமதுரை மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

சிஐடியு ஆர்ப்பாட்டம்  

மானாமதுரை, மே 15- 8 மணிநேர வேலையை 12மணிநேர மாக மாற்றிய மோடி அரசின் தொழிலா ளர் விரோத போக்கை கண்டித்து சிஐடியு சார்பில் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மானாமதுரை சிப்காட்டில் சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா தலைமை யிலும், பகத்சிங் ஆட்டோ சங்கம் அருகே ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலை மையிலும், ஸ்டேட் பாங்க் அருகே அரசு போக்குவரத்து துறை தொழிலாளர் சம் மேளனத்தின் பொறுப்பாளர் முனியராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் ஆண்டி, லூர்து, பரமாத்மா, முருகா னந்தம், ராஜாராமன் ஆகியோர் பேசினர். 

ஒருவர் தற்கொலை

மதுரை, மே 15- மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன், பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். ஊரடங்கால் இவ ரது தொழில் முற்றிலும் முடங்கிய நிலை யில் கடன் கொடுத்தவர்களும் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளனர். மன உளைச் சலோடு இருந்த இளங்கோவன் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை க்கு முயன்றார். ஆனால் உயிர் போகாத தால், வியாழன் அதிகாலை தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் கடிதம் எழுதி வைத்ததாக தகவல் வெளி யாகி உள்ளது.  இளங்கோவனின் சடலத்தை கைப் பற்றிய போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஜவுளிக் கடை வியாபாரிகள் மனு

திருவில்லிபுத்தூர், மே 15- மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி கடைகள் மற்றும் காலணி கடைகளை வியாழன் முதல் செயல்பட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள ஜவுளிக் கடை களை திறக்க அனுமதிக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்ப டைகிறது என வட்டாட்சியரிடம் ஜவுளி வியாபாரிகள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சிஐடியு ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், மே 15- இராமநாதபுரம் உபமின் நிலையம் முன்பு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதை கைவிட வேண்டும், ரேசன் கார்டு உள்ள அனை வருக்கும் ரூபாய் 7500 வீதம் 3 மாதங்க ளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட தலைவர் எம்.அய்யாத் துரை தலைமை தாங்கினார்.  இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் ஆர். குருவேல், வீ.பாஸ்கரன், எம்.குமார், எம் மலைராஜன் உட்பட போக்கு வரத்து, மின்சாரம், குடிநீர் போன்ற அரங்க ங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தையல் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி முதல்வருக்கு மனு

இராமநாதபுரம், மே 15- தையல் கலைஞர்கள் சங்க (சிஐடியு) இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலா ளர் ஏ.ஞானசேகர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு: உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் பரவி வரு கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயில் இருந்து மக்களை பாதுகாத்திட தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியதாகும். இந்நோயில் இருந்து தமிழகத்தை பாதுகாத்திட அனைத்து தரப்பினரும் சுயக் கட்டுப்பாட் டில், வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இதனை ஏற்று ஏழை எளிய மக்கள் வீடுகளிலேயே உள்ளனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை களுக்காக தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம், ஆட்டோ, சாலை யோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலா ளர்களுக்கு நிவாரண நிதியாக, ரூபாய் 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது பாராட்டுக் குரியதாகும்.   இதுபோன்று தமிழ்நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பகுதி பெண்கள் ஆவர். அதிலும் கணவனால் கை விடப்பட்டவர்கள், விதவைப் பெண்கள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். எனவே வாரியத்தில் பதிவு செய்த தையல் கலைஞர்களுக்கும், அரசு பள்ளி களில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கும் இலவச பள்ளிச் சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கொரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய். 5000, வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச பள்ளி சீருடை 2019 -ம் ஆண்டுக்கு தைத்த 4- செட் துணிக் கான கூலி வழங்கப்படாமலே உள்ளது. உட னடியாக கூலியையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.