tamilnadu

திருநெல்வேலி ,நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

நெல்லை அருகே காரில் வைத்திருந்த நகை மாயம்

திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லை அருகே திரு மண மண்டபத்தில் காரில் வைத்து இருந்த 15 பவுன் நகை மாயமானது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த வர் காஜாமைதீன் மகன் முகம்மது அலி (31). இவர் சனியன்று இரவு ஒரு திரு மண விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக காரில் முன்னீர்பள்ளம் போலீஸ் சரகம் செங்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தி ற்கு  வந்து இருந்தார். பின்னர் காருக்கு திரும்பி வந்த போது காரில் வைத்திருந்த நகை பெட்டியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதில் 15 பவுன் நகை வைத்திருந் தார். இதுகுறித்து முகமதலி உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். தகவல் அறிந்த போ லீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திரு மணவிழாவில் காரில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரியில் கடல்சீற்றம்: வெறிச்சோடியது கடற்கரை

நாகர்கோவில், ஜூன் 30- சர்வதேச சுற்றுலாத் தல மான கன்னியாகுமரிக்கு தின மும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடல் பகுதியில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. திடீரென கடல் உள்வாங் குவது, கடல் மட்டம் தாழ்வது, கடல் சீற்றம் என மாறி மாறி காணப்படுகிறது. இந்நிலை யில் ஞாயிறன்று காலை குமரி கடல் பகுதியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. தொடர் கடல் கொந்தளிப்பு டன் காணப்பட்டது. இதை யடுத்து கடலோர பகுதிகளில் ஊர் காவல் படையினர் குவிக் கப்பட்டு திரிவேணி சங்கமம் உள்பட முக்கிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க அனுமதி மறுத்தனர். இதன் காரணமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை குமரியில் குவிந்த வடமாநில சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்பிற்பகல் வரை கடலில் இறங்க அனுமதி மறுக்கப் பட்டதால் சுற்றுலா பயணிக ளின்றி குமரி வெறிச்சோடி காணப்பட்டது.

கடன் தொல்லையால்  விஷம் குடித்தவர் பலி

4 பேர் மீது வழக்கு, ஒருவர் கைது

நாகர்கோவில், ஜூன் 30-    குமரி மாவட்டம் பறக்கை சுவிசேஷபுரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (39). கொத்தனார். இவரது மனைவி ஜேசுரோஸ்லெட் (34). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கடந்த 24 ஆம் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்தனர். அவர்களை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்  சேர்த்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிம்சோன் எழுதியிருந்த கடிதத்தில் கடன் கொடுத்தவர்கள் தன்னை மிரட்டியதாக கூறியிருந்தார். இதுபற்றி சிம்சோன் மகன் அளித்த புகாரின் அடிப்ப டையில் சுசீந்திரம் வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சேகர் (28), சதீஷ் (32), பழவூரை சேர்ந்த ஜெயராஜ் (34), வடக்கன் குளத்தை சேர்ந்த அருள்ஜோதி (22) ஆகிய 4 பேர் மீது அதிகப்படியான வட்டி வசூலிப்பு தடுப்பு  சட்டம்-2003 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையி னர் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜெயராஜை மட்டும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிம்சோன் சனியன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
 

திருச்செந்தூர் பகுதியில்  தீவிபத்து:  தென்னை, சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாகின

தூத்துக்குடி,ஜூன் 30  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளையை சேர்ந்தவர்  அமிர்தம் மகன் ரவிக்குமார் (45). இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 1600 தென்னை மரங்கள் உள்ளன. இவரது தோட்டத்தில் சனிக்கிழமை பகலில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.  இதில், சொட்டு நீர்ப்பாசனத்திற்காக போடப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்தன. தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இதே போல் பரமன்குறிச்சி அருகேயுள்ள எள்ளுவிளையைச் சேர்ந்த தமிழரசுக்கு சொந்தமான தோட்டத்தில் சனிக்கிழமை, தோட்டத்தின் வழியே செல்லும் மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீப்பிடித்ததில் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சாத்தான்குளம் தீயணைப்புப் படையினர் வந்து தீயை அணைத்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி, தளவாய்புரம் - மத்திமான்விளையில் சனியன்று பிற்பகலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆறுமுகபுரத்தைச் சேர்ந்த கண்ணன், தளவாய்புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், மத்திமான்விளையைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோருக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தர்ப்பூசணி உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். சவுக்கு மரங்கள் நாசம் உடன்குடி கொட்டங்காடு அருகே வீரலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பெ.சுந்தராசன். இவரது சவுக்குத் தோப்பு ஊர் எல்லையில் அமைந்துள்ளது. சனியன்று  பிற்பகலில் இத்தோப்பில் தீவிபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாயின. குலசேகரன்பட்டினம் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, கொட்டங்காடு, கந்தபுரம் பகுதிகளில் தோட்டங்களில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளன. காற்று வேகமாக வீசும்போது மின்விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, மின்வாரியத்தினர் மின்கம்பிகளை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

;