tamilnadu

அச்சத்தில் உறைந்துள்ள மதுரை மக்கள் 35 லட்சம் பேர் பாதுகாப்பாக உள்ளனராம்: அமைச்சர் 1,200 முதல் 1,500 சோதனைகளே நடைபெறுகிறது: ஆட்சியர்

மதுரை, ஜூன் 27- கொரோனா பரவலால் மதுரை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ள னர். மக்கள் நெருக்கம் மிகுந்த ஜெய் ஹிந்த்புரம், சுப்பிரமணியபுரம், சோலை யழகுபுரம், ஜீவாநகர், பெத்தானியா புரம், குருதியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தத்தனேரி, செல்லூர், கோரிப்பாளையம், மதிச்சி யம், மீனாட்சிபுரம், மஹால், பந்தடி, அனுப்பானடி, மீனாட்சி தியேட்டர் பள்ளம் போன்ற பகுதிகளில் மக்கள் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும் வாழும் பகுதியாகும். இங்கெல்லாம் எத்தனை பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெருவாரியாக மதுரை மாநகராட்சி அறிவித்தால் தான் மக்கள் பீதியிலி ருந்து வெளியேவருவார்கள். வெறும் பணியாளர்கள் புள்ளிவிவரம், பொத் தாம் பொதுவான கணக்கீடு இவை மக்களின் அச்சத்தைப் போக்காது. இந்த நிலையில் மதுரை வேளாண் மைக் கல்லூரில் உள்ள கொரோனா தடுப்பு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் “மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மக்கள் பாது காப்பாக உள்ளனர்.

1477 பேர்கள் வெளியிலிருந்து வந்தவர்களில் 553 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையில் குணமடைந்தவர்கள் 94 சதவீதம் என்றார். ஆட்சியர் டி.ஜி.வினய் கூறுகை யில், “ கொரோனா சிகிச்சைக்காக அரசு இராஜாஜி பல்நோக்கு மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. 350 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளது. அரசு மருத்துவமனை பழைய கட்டி டத்தில் 250 படுக்கைகள், ஆஸ்டின் பட்டி மருத்துவனையில் 250 படுக் கைகள், அரசு இராஜாஜி மருத்துவ மனை கட்டுப்பாட்டில் 1400 படுக்கை வசதிகள் உள்ளன.  வேலாம்மாள் மருத்துமனை, அப் பல்லோ மருத்துவமனை, வடமலை யான் மருத்துவமனை ஆகிய மருத்து வமனைகளில் கோவிட்-19க்காக 714 படுக்கைள் என மொத்தம் 2546 படுக் கைகள் சிகிச்சை அளிக்கக்கூடிய அனைத்து மருத்துவ உபகரணங்க ளோடு தயார் நிலையிலே உள்ளது திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய தாலூகா மருத்துவ மனைகளிலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இரயில்வே மருத்துவனை, இ.எஸ்.ஐ. மருத்துவ மனை ஆகியவையும் உபயோகப்படுத் தப் படுகிறது. இதைத் தவிர கல்லூரி விடுதிகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வசதி இந்த நோய்க்கு முக்கியம் என்பதால் போதுமான அளவு சிலிண்டர் ஏற்பாடு செய்யப்படு கிறது. 1200 முதல் 1500 வரை பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.  மேலும் மீனாட்சிமிஷின் நர்சிங் கல்லூரி, மதுரை தெற்கு கூட்டுறவு பயிற்சி மையம், மதுரை மேற்கு மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம், விருந்தினர் மாளிகை, திருமங்கலம் ஹோமியோ பதி மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி மற்றும் விருந்தினர் மாளிகை, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கள்ளிக்குடி காமராஜர் பொறியியல் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கலைக்கல்லூரி, மதுரை கிழக்கு என்சிசி பயிற்சி மையம், மீனாட்சி அரசு பெண்கள் கலைக்கல்லூரி, பாத்திமா பெண்கள் கலைக்கல்லூரி, லதாமாதவன் பொறியியல் கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கலைக்கல் லூரி, கிருஷ்ணா கல்லூரி, யாதவா ஆண்கள் கலைக்கல்லூரி, யாதவா பெண்கள் கலைக்கல்லூரி, திரு வள்ளுவர் கல்வி நிறுவனங்கள், பரா சக்தி கல்லூரி, லேடிடோக் பெண்கள் கலைகல்லூரி, அருளாணந்தர் கலைக் கல்லூரி, மேலூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய மையங்களில் தேவையான படுக்கைகள், தேவையான பொருட் கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது மதுரை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசா கன், மதுரை அரசு இராஜாஜி மருத்து வமனை முதன்மையர் மரு.சங்குமணி, துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பாக உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் மதுரையில் எடுக் கப்படும் கொரோனா பரிசோதனைக் கும் மிகப்பெரிய இடைவெளியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறித்து பல்வேறு விவரங்களை செய்தியாளர்களுக்கு வழங்கிய அமைச்சரும், ஆட்சிய ரும் வேலம்மாள், அப்பல்லோ மருத்து வமனைகளில் எவ்வளவு கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறலாம் என்பதை தெரிவிக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை கொரோனா பாதிப்பு விபரங்களை வெளியிட்டது. இதில் மதுரையில் 217 பேர் (சனிக்கிழமை) பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண் ணிக்கை 1703 ஆக அதிகரித்துள்ளது. 

;