tamilnadu

“தபால் வாக்கு நிச்சயம் கிடைக்கும்” ஜாக்டோ - ஜியோவிடம் மதுரை ஆட்சியர் உறுதி

மதுரை, ஏப்.8-

மதுரை மக்களவைத் தொகுதி உட்பட மதுரை மாவட்டத்தில் தேர்தல்பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களில் 90 சதவீம்பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப் படவில்லை. இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஞாயிறன்று கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். தபால் வாக்குகள் உறுதிசெய்யப் படவில்லை எனில் தேர்தல் பணியை புறக்கணிக்க வேண்டிய சூழல் ஏற்படும்எனவும் அரசு ஊழியர்கள் பலர் தங்களது குமுறலை வெளிப்படுத்தியிருந்தனர்.இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோஅமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.நீதிராஜா, ஜெயராஜராஜேஸ்வரன், ராமமூர்த்தி, அ.பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரைஆட்சியர் ச.நடராஜனை திங்களன்று மாலை சந்தித்து தபால் வாக்குகள் கிடைப்பதில் உள்ள இடர்பாடுகள், காலதாமதம், தேர்தல் பணிச்சான்று வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவான மனு ஒன்றை அளித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மதுரைதொகுதி உள்ளிட்ட மதுரை மாவட்டத் தில் தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு பத்து சதவீதம் அளவிற்கே தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென மதுரை தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜனிடம் முறையிட்டோம். அவர் அனைவருக்கும் தபால் வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். ஒரே நாடாளுமன்றத் தொகுதிக்குள் பணியாற்றுபவர்களுக்கு தேர்தல் பணிச் சான்று (நுனுஊ) வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 13-ஆம் தேதிக்குள் இப்பணிகள் முழுமைபெறும். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவதே தமது இலக்கு என தேர்தல் நடத்தும் அலுவலர் ச.நடராஜன் உறுதியளித்துள்ளார். அவரை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். ஏப்.13-ஆம் தேதிக்குள் தபால் வாக்குகள் கிடைக்கவில்லையெனில் அடுத்து என்ன செய்வதென யோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

;