tamilnadu

மதுரை போலீஸ்காரர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

மதுரை, மே 27- மதுரை அண்ணாநகரை அடுத்த மேல மடை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் சலீம் மகன் ஷாஜகான் (வயது 22). இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரு கிறார். இந்த நிலையில் ஷாஜகான் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக மதுரை வந்திருந்தார். அப்போது மேலமடை பகுதி யில் பெண்ஒருவரிடம் மர்ம கும்பல் செயின்  அறுப்பில் ஈடுபட்டு உள்ளது. ஷாஜகான்நே ரடியாக அந்த பகுதிக்கு சென்று தட்டி கேட்டார். அப்போது அங்கு இருந்த அன்பு செல்வன் உள்பட 3 பேர் கும்பலுடன் தகராறு  ஏற்பட்டது. ஷாஜகான் இதுதொடர்பாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அன்புசெல்வன் உள்பட  மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அன்புசெல்வனின் நண்பர் முருகன், செவ்வா யன்று நள்ளிரவு ஷாஜகான் வீட்டுக்கு சென்று  உள்ளார். அப்போது மதுப்பாட்டிலில் மண்ணெ ண்ணெய் ஊற்றி, தீ வைத்து வீட்டின் மீது  எறிந்தார். இதனால் அந்த பகுதியில் சப்தம்  கேட்டது. ஷாஜகான் குடும்பத்தினர் கதவை திறந்து  வெளியில் வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் அழைப்பு மணி மீது பட்டு மண் எண்ணை பாட்டில் உடைந்து சிதறி, அந்த பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. பதற்றம் அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக ஷாஜகான் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி  வழக்குப்பதிவு செய்து, ஷாஜகான் வீடு மீது  மண் எண்ணை பாட்டில் வீசியதாக, முருகன் என்பவரை கைது செய்து காவல்நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆயுதப்படை காவல்துறை அதிகாரி வீட்டில் பாட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம், மாநகரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

;