tamilnadu

மதுரை,இராமநாதபுரம் முக்கிய செய்திகள்

மதுரையில் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை, ஜூன் 29- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மதுரை மாவட்டத்தில் ஞாயிறு வரை 1,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதுரையில் திங்களன்று ஒரே நாளில் 290 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,302 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 591 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 1,379 பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்க ளன்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக நகர் செயலாளர் உட்பட 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் 66 பேருக்கும், திண் டுக்கல்லில் 64 பேருக்கும், சிவகங்கை யில் 21 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தேனியில் தேனி மாவட்டத்தில் ஆவின் தலைவரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தப்பியுமான ஓ.ராஜா, அவ ரது மனைவி ,உறவினர்கள், கம்பம் சட்ட மன்ற உறுப்பினரின் வாகன ஓட்டுநர், காவ லர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது.

மனித நேயர் விருது பெற்றார் நவாஷ்கனி எம்.பி.
இராமநாதபுரம், ஜூன் 29-  உலகளாவிய மனிதநேயர் விருது இராம நாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பி னர் கே. நவாஷ்கனிக்கு வழங்கப்படுகிறது. WORLD HUMANITARIAN DRIVE - LONDON. என்ற சர்வதேச தொண்டு அமைப்பு உலகளாவிய மனிதநேய விரு தாளர்களை அறிவித்துள்ளது. 34-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,600-க்கும் மேற்பட்டவர்கள் பரிசீலனைக்கு உட்படுத் தப்பட்டனர். விருதாளர்கள் பட்டியல் ஞாயிற்றுக் கிழமை நேபாள் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள், கொசோவோ முன்னாள் ஃபத்மீர் சேஜ்டியூ, ஸ்பெயின் நேஷனல் ஆசெம்ப்ளி தலைவர் பெட்ரோ ஐ அல்ட மிரனோ உள்ளிட்டோர் அறிவித்தனர். அரசியல் பிரிவில், ‘சிறந்த மக்கள் தூதர்’ என்ற விருதை இராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் கே.நவாஷ்கனி எம்.பி. பெற்றுள்ளார்.

;