இராமநாதபுரம், ஜூன் 4- இராமநாதபுரம் அரசு மருத்துவமனை யில் அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சையளிப்பதை உறுதிப்படுத்த வேண் டும். 27 நாட்களில் 47 பேர் பலியாகியுள்ள னர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் வி.காசிநாததுரை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- கொரானோ வைரஸ் சிகிச்சை அளிப்ப தற்காக இராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் ஆண், பெண் வார்டுகளாக செயல் பட்டு வந்த 200 படுக்கை கொண்ட பகுதி கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்து வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் எம்.எஸ். வார்டுகள் கொரோனா சிகிச் சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு, குழந்தைகள் மருத்துவ பகு திக்கான கட்டிடம் ( மருத்துவ கல்லூரி உரு வாக்கத்திற்காக) இடிக்கப்பட்டு வரும் நிலையில் இருதய நோய், நுரையீரல், சர்க்கரை போன்ற பல்வேறு நோயால் பாதித்து மருத்துவமனைக்கு வருபவர் களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படா ததால் 27 நாட்களில் 44 நோயாளிகள் இறந் துள்ளனர். உள்நோயாளிகளாக அரசி யல்வாதிகள், செல்வாக்குள்ளவர்கள் மட் டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிபாரிசு இல்லாத நோயாளியை உள்நோயாளியாக அனுமதிப்பதில்லை கை கால்வலி, காய்ச்சல் என்றால் கூட ஊசி போடுவதில்லை. எல்லா நோய்களுக் கும் மாத்திரை மட்டும் கொடுக்கும் நிலையே நீடிக்கிறது. கொரோனாவைக் காரணம் காட்டி பல்வேறு நோயாளிகளுக்கு மருத்துவம் மறுக்கப்படுகிறது. இது தமிழக அரசின் அக் கறை இல்லாத போக்கையே காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே ஆட்சியர் தலையிட்டு அனைத்து வகை நோயாளிகளுக்கும் கிசிக்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.