மதுரை, ஜூலை 7- தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின், சமம் உபகுழு மாநில மாநாடு மதுரையில் அறிவியல் இயக்க மாநி லத் தலைவர் பேரா.சோ.மோகனா தலைமையில் ஜூன் 29 அன்று நடை பெற்றது. மாநிலத் துணைத் தலைவர் வெண்ணிலா வரவேற்புரை நல்கினார். அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் அ.அமலராஜன் துவக்க உரையாற்றினார். மேனாள் சமம் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.ராதா, சமம் நடந்து வந்த பாதை பற்றி பேசி னார். அகில இந்திய அறிவியல் கூட்ட மைப்பின் பொதுச்செயலாளர் பேரா.பொ.இராஜமாணிக்கம், அறிவியல் இயக்க மதுரை மாவட்ட செயலர் மலர்செல்வி மற்றும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் ஆர்.எஸ். செண்பகம் வாழ்த்துரை வழங்கினர். இரண்டாம் அமர்வில் புதுச்சேரி சமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவ காமி தலைமையில், சமம் அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து லட்சுமி, சமம் உபக் குழுவின் கடந்த 2 ஆண்டு கால செயல்பாடுகளை 19 மாவட்டங்களிலிந்து வந்திருந்த 152 பிரதிநிகளுக்கு அறிக்கையாக முன்மொழிந்தார். மூன்றாம் அமர்வில் அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் ஜினோபாய் தலைமையில், மாவட் டங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதி கள் அறிக்கை மேல் விவாதம் நடத்தி னர். சமம் ஒருங்கிணைப்பாளர் முத்து லட்சுமி தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சமம் அமைப்பின் ஆலோசகர் ரமேஷ், மாநாட்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கி னார். தமுஎகச கௌரவத் தலைவர் ச.தமிழ்செல்வன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் சர்வதேச மகளிர் தினப் போட்டிகளில், பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் நினை வுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக சமம் உபக் குழு வில் செயல்பட்ட உறுப்பினர்களுக்கும் நினைவுப்பரிசுகள் கொடுக்கப்பட்டன. இம்மாநாட்டில் தீபம் மகளிர் அமைப்பு, அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா.சோ.மோகனாவுக்கு, அந்த சமூகப் பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌர வித்தது.