tamilnadu

img

மார்ச் 18-இல் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம்... நாட்டு மக்களின் சேமிப்பு ரூ.32 லட்சம் கோடியை அந்நியர்களுக்கு கொடுக்கத் துடிக்கும் மத்திய அரசு....

மதுரை:
மத்திய அரசு இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது,  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை அந்நிய முதலாளிகள் உரிமை கொண்டாட அனுமதிப்பது என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.உள்நாட்டு சேமிப்பை கையாள அந்நிய மூலதனத்திற்கு அளிக்கப்படும்கூடுதல் அனுமதி தேசத்திற்கு ஊறுவிளைவிப்பதாகும். என காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மதுரைக் கோட்ட பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ்கண்ணன் கூறினார். மதுரையில் செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ்கண்ணன் கூறியதாவது:-

எல்.ஐ.சியின் பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடிமுதலீட்டு வரம்பை 49 சதவீதத்தி லிருந்து 74 சதவீதமாக உயர்த்து வது, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றை தனியார்மயமாக்குவது என்ற மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக மார்ச் 18-ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட எல்ஐசி ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முதல்நிலை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். 

எல்.ஐ.சியின் பங்கு விலக்கல் நடவடிக்கை தனியார்மயத்திற்கான முதல் படி. எல்.ஐ.சி-யின் சொத்து மதிப்பு (31.03.2020 கணக்கின்படி) 32 லட்சம்கோடியாக உள்ளது. எல்ஐசி நிறுவனம்30 கோடி தனிநபர் பாலிசிதாரர்கள், 12 கோடி குழுக் காப்பீடு பாலிசிதாரர்களை கொண்டுள்ளது.  மத்திய- மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு மற்றும் சமூகநலத் திட்டங்களில் எல்.ஐ.சி-யின்  மொத்த முதலீடு ரூ.24 லட்சம் கோடி. 1956-ஆம் ஆண்டிலிருந்து  இது வரைதரப்பட்ட மொத்த ஈவுத்தொகை ரூ.28,000 கோடியைத் தாண்டியுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் மட்டும் தரப்பட்ட ஈவுத்தொகை ரூ.2,698 கோடி. எல்.ஐ.சி பங்கு விற்பனை நடவடிக்கை மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். தேசியமயமாக்கல் நோக்கங்கள் பின்னுக்குத் தள்ளும்.  வறிய நிலை மக்களுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்பை விரிவடையச் செய்வது என்ற சமூக நோக்கம் பின்னுக்குத் தள்ளப்படும். 

மத்திய அரசு இன்சூரன்ஸ்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது,  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை அந்நிய முதலாளிகள் உரிமை கொண்டாட அனுமதிப்பது என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை. உள்நாட்டு சேமிப்பை கையாள அந்நிய மூலதனத்திற்கு அளிக்கப்படும் கூடுதல் அனுமதி தேசத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயம் ஏற்புடைய தல்ல. எந்தவொரு பொதுத்துறை பொது 
இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதும் தேசநலன் சார்ந்த நடவடிக்கை அல்ல . கடும் போட்டிக்கு மத்தியிலும் சந்தையில் தங்கள் ஆளுமையை பொதுத்துறை பொது இன்சூரன்ஸ்நிறுவனங்கள் தக்கவைத்து நிரூபித்துள்ளன.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ்நிறுவனத்தையும் தனியார்மய மாக்குவதற்குப் பதிலாக, அனைத்து பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் அரசு ஒன்றிணைக்க வேண்டும். அதுவே போட்டியை வெற்றிகரமாகச் சமாளிக்க வழிவகுக்கும். மத்திய அரசு எல்ஐசி பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி மார்ச் 18 ஆம் தேதி  ஒரு நாள்வேலைநிறுத்தத்தில் எல்.ஐ.சி ஊழியர்களோடு இந்திய மக்களும் இணைந்துதங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும். மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பணியாற்றும் எல்ஐசி ஊழியர்கள்,வளர்ச்சி அதிகாரிகள், முதல் நிலைஅதிகாரிகள் என 1000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். எங்களது போராட்டத்திற்கு மதுரை கோட்டத்திற்குட்பட்ட சுமார் 10 ஆயிரம் எல்ஐசி முகவர்கள் ஆதரவளிக்கின்றனர். இவ்வாறுஅவர் கூறினார்.பேட்டியின் போது மதுரை கோட்டத்தலைவர் ஜி. மீனாட்சிசுந்தரம், மதுரைக் கோட்ட துணைத் தலைவர் ந.சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

;