விருதுநகர், நவ.27- தென்கோடி பரப்பில் இருந்து வர லாற்றை எழுத தொல்லியல் ஆய்வா ளர்களுக்கு துணை நிற்போம் என்றும் வர லாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் போது தான் உண்மையான வரலாறை அனை வரும் அறிய முடியும் என்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென் னரசு தெரிவித்தார். விருதுநகரில் பாண்டிய நாட்டு வர லாற்று ஆய்வு மையம் சார்பில் நூல்கள் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமையேற்ற, தமி ழக தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி, தொல் லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: விருதுநகர் மாவட்டம், வரலாற்றுனு டைய காலத்தில் தன்னுடைய சுவடு களை மிக அழுத்தமானதாகக் கொண்ட மாவட்டமாகும். வரலாற்றில் மைக்ராலாஜி பீரியட் எனக் கூறப்படும் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு மக்கள் வாழக்கூடிய பகுதி யாக, மக்கள் வசிக்கக் கூடிய பகுதியாக அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியில் இன் றைக்கும் விருதுநகர் மாவட்டம் இருந்து வருகிறது. நாகரீகம் தழைத்து செழித்து வாழ்ந்து வந்த நிலப்பரப்பாகவும் இருந் துள்ளது. விருதுநகர் மாவட்டம் குறித்த வர லாற்று செய்திகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள வாழ்விடங்கள், சோழர், பாண்டி யர் காலங்களில் எல்லாம் விருதுநகர் மாவட் டம் உள்ளது.
இந்த மாவட்டத்தின் முழு வரலாற்றை யும் கொண்டு வர வேண்டும் என நமது ஆய்வு மையம் முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வு களோடு, விட்டுப்போயுள்ள செய்திகளை யும் ஒன்றாக இணைத்துக் கொண்டு உண் மையான வரலாற்றை நாம் எழுத வேண்டும். நமது ஆதி, அந்தம் முழுவதும் வெம் பக்கோட்டை தொல்லியல் அகழாய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை தொடர்ந்து மேற் கொண்டு வரும் பாண்டிய நாட்டு வர லாற்று ஆய்வு மையம் தன்மை முழுமை யாக ஈடுபடுத்திக் கொள்ளும். இக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரலாற்று ஆய்வாளர்கள் உரு வாகி வருகின்றனர். அதிலும், பல இளம் ஆய்வாளர்கள் சிறப்பாக பணியாற்றி வரு கின்றனர். பல புதிய இடங்களில் ஆய்வு மேற் கொள்ள வேண்டும். அதுகுறித்து மத்திய தொல்லியல் ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யவுள்ளோம். அதிலும் குறிப்பாக பொற்பனைக்கோட்டை பகுதியில் தொல்லி யல் ஆய்வுகளை தமிழக அரசின் சார்பில் செய்திட வேண்டும். வரலாறு மீட்டுருவாக் கம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யப் படும்போதுதான் உண்மையான வர லாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நிலப்பரப்பில் இருந்து இந்தியா வினுடைய வரலாற்றை எழுதுவது முறை யாக இருக்குமோ, அது தென்கோடி பரப் பில் இருந்து வரலாற்றை எழுதக்கூடிய முயற்சியில் கரம் கோர்த்திருக்கும் தொல் லியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் துணை நிற்போம். இவ்வாறு அமைச்சர் பேசினார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் சாந்தலிங்கம் வரவேற்றார். நூல்களை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளி யிட்டு விருதுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முதல்படி யை பெற்றுக் கொண்டார். நூலைப் பற்றி முனைவர் விசயவேணுகோபால் அறி முகம் செய்தார். ஆய்வாளர் உதயகுமார் நன்றி கூறினார்.