புரட்சிகரமான ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தின் கட்சி உருவாக்கப்பட்டதாலேயே லெனின் அவர்கள் 1905, 1917 பிப்ரவரி/ 1917 நவம்பர் புரட்சிகளை வழிநடத்த முடிந்தது. “அரசும் புரட்சியும்” எனும் தனது படைப்பில் லெனின், ரஷ்யப் புரட்சிகளின் வரலாறு மற்றும் அனுபவம் குறித்து ஒரு அத்தியாயத்தை எழுத திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் முதல் வாக்கியத்தை எழுத தொடங்குவதற்கு முன்பே ரஷ்ய நவம்பர் புரட்சி வெடித்துவிட்டது. எனவே அவர் எழுதினார்: “புரட்சி பற்றி எழுதுவதைவிட அந்த புரட்சியின் ஊடாக நேரடியாக பயணிப்பது மிக மிக பயனுள்ளது”.