tamilnadu

சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தற்போதைய நிலையே தொடரும் மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு

மதுரை, ஜூன் 4- மதுரை தாமரைப்பட்டி முதல் வாடிப் பட்டி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக் கும் பணிக்காக நிலம் கையகப்படுத்த தடை கோரி வழக்கில் நிலத்தை கையகப்படுத்த வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தற் போதைய நிலையே தொடருமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அலங்காநல்லுாரைச் சேர்ந்த அம்பிகா பதி, சென்னை உயர்மன்ற மதுரைக்கிளை யில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி யிலிருந்து சிட்டம்பட்டிவரை சுற்றுச்சாலை அமைக்க 2018- ஏப்ரலில் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறி விப்பு வெளியானது.

முல்லைப் பெரியாறு பாசன இருபோக பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள் ளனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.  தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்க உள்ளது. விவசா யம் முழு வீச்சில் நடைபெறும். இந்த நிலை யில் அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத் தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். எனவே புதிய தேசிய நெடுஞ்சாலை (தாம ரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை) அமைக் கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை வியாழனன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அமர்வு, நிலம் கையகப்படுத்த வெளியிட்ட அரசாணையில் மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

;