புதுக்கோட்டை, ஜூலை 31- படைப்புகளை விற்பது மட்டுமல்ல; அது மனித சமூகத்திற்கு என்ன செய்கிறது என்பதே முக்கியம் என புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் குன்றக்குடி அடிகளார் பேசினார். புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற் றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நகர்மன்றத்தில் நடைபெற்று வரும் 5 ஆவது புத்தகத் திருவிழாவின் சனிக்கிழமை இரண் டாம் நாள் நிகழ்ச்சியில் ‘அன்பே தவம்’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியதாவது: எல்லா உறவுகளும் நம்மை விட்டுச் சென் றாலும், நம்மை விட்டு அகலாத ஒரே உறவு புத்தகங்கள்தான் (கல்வி). தீபாவளி நாளில் புத்தாடைகளை வாங்கிக் கொண்டாடுகி றோம். பொங்கல் பண்டிகையன்று வீடுகள் தோறும் புத்தரிசியில் பொங்கல் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆனால், கலைமகள் விழாவன்று புத்தகங்களை மூடி வைத்து விடுகிறோம். கலைமகள் விழா அன்று உற வினர்களுக்கும், நண்பர்களுக்கும் புத்த கங்களைப் பரிசாக வழங்கும் விழாவாக நடத்த வேண்டும். அரிய நெல்லிக்கனி கிடைக்கப் பெற்ற அதியமான் அந்தக் கனியை தான் உண்ணா மல், அவ்வைப் பாட்டிக்குக் கொடுத்தான். அதன் காரணம், அவ்வையின் வழியில் அரு மைத் தமிழ் மொழி நெடுங்காலம் வாழ வேண்டும் என்பதுதான்.
நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது, வினாக்குறி போல் வளைந்து கிடந்த நிலை யை மாற்றி ஆச்சரியக் குறியாக மாற்றும் பணியில் ஈடுபட்டவர் பாரதியார். அப்போது விடுதலைக் குரலாக தமிழ் ஒலித்தது. அதன்பிறகு, மக்கள் உறக்கத்தில் இருக்கக் காரணமான கல்லாமையை அகற்ற - துன் பங்களைத் தீர்க்க தமிழ் கற்க வேண்டும் எனப் பாடியவர் பாரதிதாசன். எந்த மன்ன ருக்கும் சாமரம் வீசாமல், எந்தச் சமய சாயமும் பூசிக் கொள்ளாமல் தமிழ் உலகுக்குக் கிடைத்தது திருக்குறள். ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே கற்பது ஒன்றுதான் தீர்வு எனச் சொன்னவர் திருவள்ளுவர். 10 மாதங்கள் முடிந்து ஒரு விலங்காக இந்த உலகுக்கு வருபவரை மனிதராக மாற்று வது அவர்களுக்கு அளிக்கும் கல்விதான். அதனால்தான் “கசடறக் கற்க வேண்டும், கற்றபடி நிற்க வேண்டும்” எனச் சொன்னார் திருவள்ளுவர். நாம் கல்வி நிலையங்களில், அறிவாளிகளை, பொறியாளர்களை, மருத்து வர்களை உருவாக்கித் தருகிறோம். ஆனால், நல்ல மனிதர்களை உருவாக்கித் தருகி றோமா என்பதுதான் கேள்வி. படைப்புகளை விற்பது மட்டும் முக்கிய மல்ல; அந்தப் படைப்புகள் மனித சமூகத் துக்கு என்ன செய்கிறது என்பதுதான் முக்கி யம். எல்லா வாசல்களையும், தடைகளை யும் விலக்கி மனிதர்கள் அன்பின் தவமாய் வாழ நம்முடைய படைப்புகள் வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு காமராஜ் கல்வி நிறுவனங்க ளின் மேலாண்மை இயக்குநர் குரு. தனசேக ரன் தலைமை வகித்தார்.