நாளை கும்பகோணம் மாநகராட்சி வார்டு சபை கூட்டம் மாநகராட்சி ஆணையர் தகவல்
கும்பகோணம், ஆக.25 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி வார்டு சபை கூட்டம் அக்.27 ஆம்தேதி நடைபெறும் என கும்பகோணம் மாநக ராட்சி ஆணையர் கார்த்திக் ராஜ் அறிக்கை வெளி யிட்டுள்ளார். இதுகுறித்து அந்த அறிக்கையில், “மாநக ராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் கவுன் சிலர்கள் தலைமையில் அக்டோபர் 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) வார்டு சபை கூட்டம் காலை 10 மணிக்கு அந்தந்த வார்டுகளில் நடைபெறு கிறது. இந்த கூட்டத்தில் மாநக ராட்சியில் உள்ள பொது மக்கள் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு, பராமரிப்பு சாலை கள், பூங்கா, மழை நீர் வடிகால் பராமரிப்பு ஆகிய வற்றில் உள்ள சேவை குறைபாடுகள் குறித்து விவாதிக்கலாம். மேலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடும் மேம்படுத் தும் முறை பற்றியும் விவா திக்கலாம்” என கூறப்பட்டு உள்ளது.