“இது ஒரு பொன்மாலைப் பொழுது..”
என்ற பாடல் ஒலித்தவுடன், பதறிப்போய் சட்டைப் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்துப் பேச ஆரம்பித்தார். “சொல்லுமா.. ஆமா.. ஆமா.. எங்க இந்தக்காலத்துப் பசங்க சொல்றதக் கேக்குறாங்க.. எப்ப பாரு.. ஃபோனு.. ஃபோனு.. ஃபோனுதான்.. அதக் கைல எடுத்தா என்ன நடக்குதுன்னே அவங்களுக்குத் தெரியறதில்ல..” “தாத்தா.. தாத்தா” என்று அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினார். குட்டிப்பையன் ஒருவன் வேகமாக வந்து அவருக்குப் பின்னால் நின்றிருந்தான். “என்னப்பா..” “நீங்க ஃபோன பாக்கெட்டுலருந்து எடுக்குறப்ப நோட்டு கீழ விழுந்துருச்சு..” 200 ரூபாய் நோட்டு. “தேங்க்ஸ் பா...” - தாத்தா “பாத்துப் போங்க, தாத்தா...” ஃபோனில் தொடர்ந்தார்.. “அதாம்மா... பசங்க நல்லவங்கதான்.. நம்மள மாதிரிதான நம்ம பசங்களும்.. நாமதான் அவங்களுக்கு ஏத்தமாதிரி பேசனும்...”
