tamilnadu

நலிந்திடாமல் காப்பாய்! கோவி.பால.முருகு

குட்டி அணில்கள் துள்ளி ஓடும் காடு!-அது
குரங்குக் கூட்டம் தங்கு கின்ற வீடு!! 
வட்ட மிட்டுப் பறந்து மகிழும் காடு! --மரத்தை
வெட்டி விட்டால் பறவைக்கு ஏது வீடு? 

சிங்கம் சிறுத்தைப் புலிகள் வாழும் காடு!-அது
செல்வம் கொழிக்கும் சிறந்த அவற்றின் வீடு!
எங்கும் மான்கள் முயல்கள் வாழும் காடு!-அவை
தங்கும் இடத்தை அழித்தால் அடையும் கேடு!

பொந்து தோறும் கிளிகள் தங்கும் வீடு!-மரம்
சிந்தும் கனிகள் தந்து நிற்கும் காடு!
பொந்தில் வாழும் குள்ள நரியின் வீடு!-அது
போற்றும் நாட்டின் புதையல் நிறைந்த காடு!

எருமைக் கூட்டம் எங்கும் உலவும் காடு!-அதன்
ஏற்ற யிடமே புற்கள் நிறைந்த வீடு!
அருமை மிக்க செல்வம் கொழிக்கும் காடு!-அதை
அழித்து விட்டால் நாடு இல்லை சுடுகாடு!

உயர்ந்த மரங்கள் நிறைந்த நல்ல காடு!-அது
உலகம் போற்றும் செல்வம் கொழிக்கும் வீடு!
உயர்ந்த காட்டில் வாழும் காட்டு வாசி!-அவர்
உரிமை கொண்டு காத்து நிற்பதை நேசி!

காட்டை அழித்து சொந்த மாக்கும் கூட்டம் !- இனி
நாட்டை விட்டே ஓட வேண்டும் ஓட்டம்!
நாட்டைக் காக்க,காட்டைக் காக்க எழுவாய்!-நீ
நாட்டின் இயற்கை வளத்தை நன்றாய் காப்பாய்! 
 

;