tamilnadu

img

கிராமங்கள்தோறும் செங்கொடி உயரட்டும்! மதுரை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் முழக்கம்

மதுரை, ஏப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக புதனன்று மதுரையில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது: பாஜக சிறு, சிறு பிரச்சனைகளைக் கூட மதச்சாயம், காவிச்சாயம் பூசி அர சியலாக்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மிக்கேல்பட்டியில் 162 ஆண்டு கள் செயல்பட்டுவந்த கிறிஸ்தவ பள்ளி யில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதை மதச்சாயம் பூசி அரசியலாக்கியது. சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொன்னதும், உயர்நீதி மன்றமும் அதற்கேற்ப உத்தரவிடுகிறது. இந்தச் சம்பவத்திற்குக் காரணம் “மத மாற்றம்” என்ற இல்லாத பூதத்தை காட்டுகிறது. கோவில் திருவிழாக்கள் நடந்தால் அங்கு காவிக்கொடியை கட்டி பாஜக  அரசியல் நடத்துகிறது. மதவெறி அர சியலுக்கு வித்திடும் பாஜக -ஆர்எஸ்எஸ் முயற்சியை முறியடிக்க மதச்சார் பின்மையை வலியுறுத்தி, பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவோம். தமிழகத்தில் அனைத்து சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக 24 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். பட்டிய லின மக்களும், பழங்குடி மக்களும் அர்ச்சகராவதை இவர்கள் விரும்ப வில்லை. கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு நீதிமன்றம் ஆதரவாக தீர்ப்ப ளித்தது போல், அர்ச்சகராகும் பணிக்கு நீதிமன்றம் தடைவிதிக்கக் கூடாது.  

விவசாயம், சிறு-குறுதொழில் நிறு வனங்கள் பாஜக ஆட்சியில் முடக்கப் பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள னர். இதற்குக் காரணம் சிறு-குறு  தொழில் நிறுவனங்களுக்குத் தேவை யான மூலப் பொருட்கள் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கையில் உள்ளது. இன்றைக்கு அரசுப் பணிக்கு ஆள் சேர்ப்பது என்பது இல்லா மல் போய்விட்டது. மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தத் தொழி லாளர்களாக அனைவரும் மாற்றப்பட்டு விட்டனர். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பெறும் ஒப்பந்த, மதிப்பூதிய, ஒப்பந்த ஊதிய தொழிலாளர்களின் இளைஞர்களின் வாழ்க்கையை பாது காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. தமிழக அரசு இந்தத் தொழிலாளர் களை நிரந்தரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரு அமைச்சர் இலாகா  மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டிய லினத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி குறித்து அவர் பேசியதைத் தொடர்ந்து இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் நடவடிக்கை பாராட்டு குரியது. அதே  நேரத்தில் அந்த அமைச்சர் செய்தது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி குற்றம். அதிமுக அரசு அப்புறப்படுத்தப் பட்டு திமுக  ஆட்சிப்பொறுப்பிற்கு வந்துள் ளது. ஊழல் செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் தவறிழைக்கமாட் டார்கள். இதற்கு திமுக அரசு முன் உதாரணமாக விளங்க வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவான பாஜக-வின் மதவாத அரசியலை மார்க்சிஸ்ட் கட்சி முறியடிக்கும். சிங்கமாக இருந்தாலும் சந்திப்போம், ஆனால் ஓநாய்களான  அவர்களை குகைகளிலேயே வந்து சந்திக்கும் துணிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. வரும் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னெப்போதையும் விட வீரியமாக செயல்படும். கிராமங்கள் தோறும் செங்கொடி பட்டொளி வீசி  பறக்கும். இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம். மதவெறி அரசி யலை முறியடிக்க ஜனநாயக சக்தி களுடன் இணைந்து போராடுவோம். அதே நேரத்தில் மக்கள் பிரச்சனை களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும் என்றார்.

காலத்தின் தேவை செந்தொண்டர் படை:  இரா.முத்தரசன்

பொதுக்கூட்டத்தில்  பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகை யில், “நாட்டைப் பாதுகாக்க சீருடையில்  ராணுவ வீரர்கள் உள்ளனர். மாநிலங் களில் சட்டத்தை நிலைநாட்ட காவல் துறை சீருடை அணிந்து செயல்படு கிறது. இவர்களையும் சேர்த்து நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை செங்கொடி இயக்கத்தின் செந்தொண்டர் படை செய்து வருகிறது. செந்தொண்டர் படை இன்றைய காலத்திற்கு நிச்சயம் தேவை. பாஜக அரசு பாசிச நடவடிக்கை களை மேற்கொள்கிறது. ஹிட்லருக்கு என்ன நேர்ந்தது என்பது அனை வருக்கும் தெரியும். அதே நிலை தான்  பாஜக அரசுக்கு ஏற்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிபிஐயும் பல்வேறு பிரச்சனைகளில் இணைந்தே போராடி வருகிறது. இன்னும் நமது செயல்பாட்டை மேம்படுத்துவோம். மக்கள் பிரச்சனைகளுக்காக இணை ந்தும் போராடுவோம் என்றார் முத்தரசன்.

விவசாயிகளை அடிமையாக்கும் மோடி அரசு : அ.சவுந்தரராசன்
மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசுகையில், “வைகை நதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடி கால் முளைத்து நடந்து  வந்தது போல் சிவப்பு நதி பெருக் கெடுத்து இங்கே வந்துள்ளது. பெட் ரோல், டீசல் விலையை உயர்த்து வதன் மூலம் வருடம்தோறும் ஏழை,  எளிய மக்கள் ரூ.10 ஆயிரம் இழந்து  மேலும் ஏழைகளாகிறார்கள். கேஸ்  விலை உயர்வின் மூலம் வருடத்திற்கு ரூ.ஆயிரம் இழந்து ஏழைகளா கிறார்கள். பாஜக மிருகத்தனமாக செயல்படு கிறது. குறிப்பாக விவசாயிகளின் விளை  நிலங்களை பறித்து கார்ப்பரேட்டுகளி டம் ஒப்படைப்பது. அவர்களிடமே நிலம் விற்ற விவசாயிகளை கூலித் தொழி லாளர்களாக அடிமையாக்குவது என்ற  முடிவில் தான் வேளாண் விரோத சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஒரு  கார்ப்பரேட் நிறுவனம் விவசாயத்தை மட்டும் பறிக்கவில்லை, விளை பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி களையும் பறிக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துகிறது. உழைப்பாளி மக்களின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை. மோடி அரசின் வேளாண் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக எப்படி தில்லியில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராடினார்களோ, அதைப்போல் ஒவ்வொரு பிரச்சனையின் அடிப்படையிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடி வெற்றிபெறு வார்கள். அந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தும். பாமக தலைவர் உழைப்பாளி மக்களின் வேலை  நிறுத்தம் தேவையில்லாது என்கிறார்.  அவரது நிலையை எண்ணி வருத்தப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். தொழிலாளர்கள் ஒன்றிய அரசின் மீது கோபம் கொண்டு சிலிர்த்தெழுந்து தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியுள்ளனர். போராடிய 25 கோடி தொழிலாளர்களை பற்றி பாமக கவலைப்படவில்லை என்றார்.

;