tamilnadu

img

மீனவர்களை போல நிவாரணம் வேண்டும் நாடக நடிகர்கள் கோரிக்கை

அழிந்து வரும் நிலையில் நாடகக் கலையை மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களையும் தமிழக அரசு பாதுகாக்க முன்வர வேண்டும். மீன்பிடி அல்லாத காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்குவது போல நாடகக் கலைஞர்களுக்கும் நிவாரண த்தொகையாக மாதம் ரூபாய் ஐந்தாயிரம் அரசுவழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கி றார்கள். இந்த சூழ்நிலையில் நாடகக் கலை ஞர்களுக்கு முற்றிலுமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் திருவிழாக்கள் அதிகம் நடை பெறும். அப்பொழுது பெரும்பாலான கிரா மங்களில் நாடகங்கள் அரங்கேற்றப்படும். வரு டத்தில் நான்கைந்து மாதங்களில் நடைபெறும் நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் சமாளித்து வருகிறார்கள். மற்ற நாட்களில் கடன்வலையில் சிக்கி கொடுமையை அனுபவித்து வருகிறார் கள். இந்த ஆண்டு நாடகங்கள் நடைபெறக்கூடிய காலத்தில் கொரோனா தொற்றுகாரணமாக நாட கங்கள் நடைபெறவில்லை.

அனைத்து நாடகக் கலைஞர்களும் நாடகம் நடத்துவதற்கான அச்சா ரங்கள்பெற்றுவிட்டார்கள். பிறதொழில்கள் நடந்தாலும் இனிநாடகத் தொழில் நடக்குமா என்ற எதிர்கால சூன்யநிலைக்கு நாடக கலைஞர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள். இனி என்ன ஆகும் இவர் களின் வாழ்வாதாரம் என்ற மிகப்பெரிய கேள்விக் குறியோடு காலத்தை நகர்த்த தயாராகிக் கொண்டி ருக்கிறார்கள். இத்தகைய சூழலில் அரசு தரும் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொரி போன் றதாகும் என்று வேதனையோடு இவர்கள் தெரி விக்கிறார்கள்.  இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நாடகக் கலைஞர்கள் சங்க தலைவர்களை சந்தித்து கேட்ட போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகப்பா நம்மிடம் கூறும்போது, மன்னர் காலத்தில் இருந் தும் ஏன் சுதந்திர காலத்தில்கூட மக்களுக்கு கலை யின் மூலம் விழிப்புணர்வு செய்தது நாடகக் கலை. டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

தமிழகமும் இதில் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை களும் முடங்கியுள்ளன. அதில் எங்கள் இசை நாட கத் துறையும் முடங்கியுள்ளது. இந்த பாதிப்பு பொதுவானது என்பதால் அதனை ஏற்றுக் கொண்டு நாங்களும் வெளியே செல்லாமல் வீடு களில் இருக்கிறோம். அரசு கொடுக்கும் நிவா ரணத் தொகை ரூபாய் ஆயிரம் சிலிண்டர் வாங்க மட்டுமே பயன்படும். சாப்பிடுவதற்கு ரேஷன் பொருட்கள் போதுமானதல்ல. மீனவர்களுக்கு எப்படி மீன்பிடி காலம் அல்லாத நாட்களில் நிவா ரணம் வழங்குவது போல நாடக கலைஞர் களுக்கு, மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு, கரகாட்டம், நடன கலைஞர்களுக்கு, நாதஸ்வர மற்றும் தப்பாட்டக் கலைஞர்களுக்கு, மாதம் ரூபாய் 5 ஆயிரம், வழங்க வேண்டும். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும், மேற்பட்ட கலைஞர்கள் உள் ளார்கள். எங்களுக்கு நாடகக் கலையை தவிர வேறு தொழில் தெரியாது.

அடையாள அட்டை மட்டுமே உள்ளது
அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் எங்க ளுக்கு கிடைக்கவில்லை தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை செயல்படுகிறது. அந்தத் துறை மூலமாக வழங்கப்பட்ட அடையாள அட்டை எங்க ளிடம் உள்ளது. இந்த நிலையில் எங்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நலவாரி யத்தில் பெரும்பாலானவர்கள் உறுப்பினர்களாக சேரவில்லை. எவ்வளவு கலைஞர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று எங்கள் சங்கத்தினரை கேட்டால் நாங்கள் பட்டியல் தர தயாராக இருக்கிறோம். எங்களது செய்திகளை அரசுக்கு தெரிவிப்பதற்கு பத்திரிக்கை மற்றும் ஊட கங்கள்தான் முன்கை எடுக்கின்றன. தமிழகத்தில் இயல் இசை நாடகத்துறை அழி யாமல் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் பாது காக்கப்பட வேண்டும்.

கொரோனா வந்து சாவதை விட நாங்கள் பட்டினியால் செத்துவிடுவோம் என்று தோன்றுகிறது. எங்களின் அரை வயிற்றுக் கான பசியைப் போக்குவதற்காகவாவது அரசு உதவி செய்ய வேண்டும். மற்ற தொழில் எல்லாம் நடந்தாலும் இனிநாடகத் தொழில் நடக் காது. ஏனெனில் எங்கள் தொழில் மக்களை கூட்டுகிற தொழில். கூட்டம் கூடினால் அது கொரோ னாவுக்கு வாய்ப்பாக அமையும் என்பதால் எங்களை தொழில் செய்ய அரசும் சுகாதாரத்துறை யும் அனுமதிக்க மாட்டார்கள் என்று எங்களுக்கு தெரியும். தொழில் நடந்தால்தான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் பிழைக்க முடியும். சாதாரணமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.30,000 வரை ஒருமாதத் திற்கு தேவைப்படுகிறது. ஆனால் ஓரளவு குடும் பத்தை சமாளிக்க ரூபாய் ஐந்தாயிரமாவது தர வேண்டும் என்பது நாடக இளைஞர்களாகிய எங்க ளது திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள் ஆகும் என முருகப்பா தெரிவித்தார்.

பொற்கிழி இன்னும் கிடைக்கவில்லை
கலைமாமணி விருது பெற்ற நடிகை வரலட்சுமி கூறும்போது, நான் போட்டுருக்க வேஷம் தான் ராணி வேஷமே தவிர வாழ்கிற வாழ்க்கை மிக மோசமானது. 3மாத நாடகம் ஆடி இரண்டு வேளை உணவு அருந்தி பட்டினியோடு வாழ்ந்து வரு கிறோம். இப்போது கொரோனா வந்து எல்லோ ரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனா காலம் முடிந்தால் அவர்கள் தொழிலுக்கு சென்று விடுவார்கள். ஆனால் எங்களுக்கு தொழில் இல்லை. வாழ்வதற்கு வழியின்றி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் நடத்துகிற நாடகத்தின் மூலம் கூட்டப்படுகிற கூட்டம் நோய்க்கு வழிவகுத்து விடும் என்பதால் இனிநாடகம் நடத்த முடியாது. எங்களை வாழ வைப்பது அரசின் கைகளில் தான் உள்ளது. இயல் இசை நாடகம் மூலம் மக்களுக்கு நன்மை களைச் சொல்லி வாழ்க்கை நடத்திக் கொண்டி ருக்கிற எங்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு விவசாயி களுக்கு முறைசாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் அறிவிக்கிறது. ஆனால் எங்க ளுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை திண்டுக்கல் மாவட்டத்தில் நாடக நடிகர் சங்கம் இருப்பதைப் போல தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. எங்கள் நாடக நடிகர்களுக்காக எங்கள் சங்க தலைவர்கள் அரசாங்கத்திடம் எவ்வளவு கோரிக்கைகள் வைத்து போராடியும் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. எனக்கு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கலைமாமணி விருது கிடைத்தது. கடந்தாண்டு பொற்கிழியும் கிடைக்க அறிவிப்பு வெளியானது. பட்டியலில் எனது பெயரும் இருந்தது என்று எங்கள் சங்கத் தலைவர்கள் என்னிடம்தெரிவித்தனர். ஆனால் இதுவரை பொற்கிழி கிடைக்கவில்லை. இந்த ஆண்டாவது எனக்கு பொருட்கள் கிடைக்குமா என்று எதிர் பார்க்கிறேன். நசிந்து வரும் நாடகத் தொழில் கலைஞர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வர லட்சுமி தெரிவித்தார்.