ஜல்லிக்கட்டை போன்றே நீட் தேர்விலிருந்தும் தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் வலியுறுத்தினார். திருவான்மியூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களுக்குப் பேட்டிய ளித்த ஜி. ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது: நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டும், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்தை கண்டித்தும் தமிழ கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்து கிறது. கள்ளக்குறிச்சி நகரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை அதிகாரிகளை அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, இறந்த வர்களுக்கு நிவாரணம் அறிவித்துள் ளது. ஒருநபர் விசாரணை ஆணை யத்தையும் அமைத்துள்ளது. இது போதுமானதல்ல. மாநில அரசு டாஸ்மாக் கடைக ளை நடத்தினால் கள்ளச்சாராயம் இருக்காது என்பதுதான் தமிழக அரசின் மதுபானக் கொள்கை. இதற்கு மாறாக, கள்ளச்சாராயம் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. இது மாநில அரசின் மதுபானக் கொள்கைக்கு சவா லாக உள்ளது. ஏற்கெனவே மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு, கள்ளச் சாராயம் விற் பனையாகும் மோசமான நிலை தான் உள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, கலால்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தொடர்போடுதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறு கிறது. எனவே, இதில் பணியிட மாற்றம், தற்காலிக நீக்கம் மட்டும் போதாது. தொடர்புடைய அனைவ ரையும் கைது செய்ய வேண்டும்.
நீட் தேர்வில் மோசடி
பாஜக-வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க் கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டுமென்று மாநில அரசும், அரசியல் கட்சிகளும் கோரி வரு கின்றன. இந்த ஆண்டு 23.33 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பாகவே கேள்விதாள்கள் வெளி யா(அவுட்)கி உள்ளது. 1563 மாண வர்களுக்கு ‘கருணை’ (கிரேஸ்) மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை எதிர்த் தும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் மாணவர்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடு செய்து மருத்துவராக வருபவர் சமூகத்திற்கு தீங்கான வராக இருப்பார். தேர்வில் 0.001 விழுக்காடு தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. விலக்கு அளிக்க வேண்டும் வனவிலங்கு பாதுகாப்பு என்ற பொருள் அரசியலமைப்பு சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டு பேருமே சட்டம் இயற்ற லாம். விலங்கு பாதுகாப்பு என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து மெரினாவில் லட்சக்கணக்கா னோர் போராடினர். அதன்பிறகு மாநில அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழகத்திற்கு மட்டும் ஒன்றிய அரசு விலக்கு அளித்தது. கல்வியும் ஒத்திசைவுப் பட்டிய லில் தான் உள்ளது. அதன்படி நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி மாநில அரசு இரண்டு சட்ட மசோ தாக்களை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. அத னடிப்படையில், ஜல்லிக்கட்டிற்கு விலக்கு அளித்தது போல், நீட் தேர்வுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்ப டையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்போது, கட்ஆப் மதிப்பெண் 200 என்றால், 180 மதிப்பெண்கள் பெற்றால்தான் சேர முடியும். ஆனால், நீட் தேர்வில் 720க்கு 137 மதிப்பெண் பெற்றவர்கள் கூட பணம் இருந்தால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். ஆகவே, மருத்துவக் கல்வியின் தரத்தை குறைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
யுஜிசி நெட்
இந்த விவகாரத்திற்கு இடையே, என்டிஏ நடத்திய யுஜிசி நெட் தேர்வை 9 லட்சம் பேர் எழுதினர். அந்த தேர்வை தற்போது ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு நடைபெற்ற சம்பவங்களில் இருந்து எந்த படிப்பினையையும் கற்றுக் கொள்ளவில்லை. என்டிஏ மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஜி. ராமகிருஷ்ணன், “தமிழ்நாட்டை போன்றே, கர்நாடக போன்று பல மாநில அரசுகள் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நீட் தேர்வை நடத்துவதோ ஒன்றிய அரசு. ஆனால், பிரதமரை ஏபிவிபி கண்டிக்க வில்லை. ஏபிவிபி போராட்டம் நடத்து வது போன்று நாடகம் நடத்துகிறது. மாணவர் நலன் சார்ந்து போராட வில்லை” என்றார்.