திருச்சி மத்திய சிறை வளா கத்தில் முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் இங்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோத னையில் ஈடுபட்டனர். விரைவில் முகாம் சிறை மூடப்பட உள்ளது என்ற செய்தி கசிந்துள்ளது. இதனால் சில சிக்கல்களும் உருவாக வாய்ப்பு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சாதாரண சிறைக்கும், முகாம் சிறைக்கும் என்ன வித்தியாசம்? அதை மூட நினைப்பது ஏன் என்று விசா ரித்தபோது கிடைத்த தகவல்கள் முக்கியமானவை: தமிழகத்தில் குற்றவழக்கில் சிக்கும் வெளிநாட்டினரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அவ ர்கள் ஜாமீன் பெற்றால், நீதிமன்ற பரிந்துரைப்படி விடுவிக்க வேண்டும். ஜாமீனில் வெளியே வரும் அவர்கள் முறைகேடாக தங்கள் நாட்டுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு முடிவே வராமல் போகும் அல்லது ஆண்டுக்கணக்கில் நிலு வையில் இருக்கும். எனவே தொட ர்ந்து வழக்கு நடத்த வசதியாக வெளி நாட்டவர்கள் தங்கி இருக்க வசதியாக இந்த முகாம் சிறை உருவாக்கப் பட்டது.
குறிப்பாக திருச்சி முகாம் சிறை யில் 164 பேர் உள்ளனர். இதில் 110 பேர் இலங்கைத் தமிழர்கள். நைஜீரியா, பல்கேரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வர்கள் 54 பேர். முகாம் சிறை என்பது வழக்கமான சிறை அல்ல. இங்குள்ள நபர்களுக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.160 கொடுக்கிறது. இவர்களை அதிகாரிகளின் அனுமதி பெற்று எப்போது வேண்டுமானாலும் உற வினர்கள் சந்திக்க முடியும். வெளி யில் இருந்து வரும் உணவை சாப்பி டலாம். டிவி, வாஷிங் மிஷின், செல்போன் என அனைத்து வசதி களையும் அனுபவிக்க முடியும். சமீபத்திய தகவல்படி இந்த முகாம் சிறையை கலைக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படு கிறது. அப்படி கலைத்தால் தங்கி உள்ள வெளிநாட்டு குற்றவாளிகள் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கைத் தமிழர் களுக்கு மாநிலம் முழுவதும் முகாம் கள் உள்ளன. முகாம் சிறையில் இருப்பவர்களை வெளிமுகாம்களில் இருப்பவர்கள் தான் சந்திக்கின்றனர். வெளியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அனை த்தையும் கியூ பிரிவு போலீசார் கண் காணிக்கிறார்கள். அங்கு தங்கியிருப் பவர்கள் குறித்த விபரங்கள் ஆவ ணத்தின்படி வாரம் ஒருமுறை சரி பார்க்கப்படும். தங்கி இருந்தவர் களின் எண்ணிக்கை குறைந்தாலும், கூடுதல் நபர்கள் இருந்தாலும் அதை அரசுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, முகாம் சிறைவாசிகள் அடிக்கடி போராட்டத் தில் ஈடுபடுவதால் அதை சமாதானப் படுத்த செல்லும்போது கியூ பிரிவு போலீசாருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி முட்டல் - மோதல் ஏற்படு கிறது. மேலும் முகாம் சிறையில் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடு பவர்கள் இலங்கை தமிழர்கள்தான். இவர்களை அவரவர் தங்கியிருக்கும் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கலாம். அங்கிருந்தே இவர்கள் வழக்கை சந்திக்கலாம். இதை வருவாய்த்துறை அதிகாரிகள் உள் துறைக்கு தெரிவித்தால் இந்த பிரச்ச னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று அரசு நினைக்கிறது. அதேசமயம், முகாம் சிறையில் இப்போது உள்ள இலங்கைத் தமிழர் களில் 5 பேர் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்ற வாளிகளாக அடையாளம் காணப் பட்டவர்கள்; இவர்களை வெளி யில் விட்டால் போதைப் பொருட் கள் நெட்வொர்க் விரிவடையும்;
இவர் களை மட்டும் மத்திய சிறையில் அடைத்து வைக்கலாம்; நைஜீரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் விசா அனுமதி முடிந்த நிலையில், வழக்கை விரை ந்து முடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்பிவைக்கலாம். இந்த பின்னணியில் இன்னும் கொஞ்ச காலம் முகாம் சிறை அவசியமாகிறது. அரசு என்ன முடிவெடுக்கப்போகிற தோ என்கிறார்கள் விஷயமறிந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சி கியூ பிரிவு போலீசாரைப் பொறுத்தவரையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர், 20க்கும் அதிகமான போலீசார் பணியில் இருந்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் இவர்கள் 2 வழக்குகள் மட்டுமே பதிவு செய் துள்ளதாக தகவல் உள்ளது. அதற்கும் இன்று வரையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வில்லை. கியூ பிரிவு போலீசார்களை பொறுத்தவரையில் முகாம் சிறை யை கண்காணிப்பதில் மட்டுமே அதிக அக்கறை காண்பிப்பதாக தகவல் உள்ளது. எது எப்படியிருந்த போதி லும் முகாம் சிறை மூடப்பட்டால் வெளிநாட்டு கைதிகளின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசின் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.