tamilnadu

முகாந்திரம் இல்லாவிட்டாலும் புகாரை தாமதமின்றி விசாரித்து,அறிக்கை தாக்கல் செய்க.... காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
புகாரில் முகாந்திரம் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் முறையாக விசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை செல்லூரைச் சேர்ந்த ராஜபிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த மனுவில்,எதிர் வீட்டு குடும்பத்தில் ஒருவரின் திருமணத்துக்கு நான் உதவினேன். திருமணம் செய்து கொண்ட இருவரும் பின்னாளில் விவாகரத்து பெற்றனர். இதற்கு நான் தான் காரணம் என்று கருதி பெண் வீட்டினர் என்னிடம் அடிக்கடி தகராறு செய்தனர். ஒரு நாள் நடந்ததகராறில் என்னை கல்லால் தாக்கினர். எனது தலையில் காயம் ஏற்பட் டது.இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், இதுவரை முறையாக விசாரிக்கவில்லை. எனவே, நான் தாக்கப் பட்ட வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பொங்கியப்பன் முன்பு சனிக்கிழமையன்று நடைபெற்றது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றவியல்நடைமுறைச் சட்டப்படி பெறப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் புகாரை முறையாகவிசாரித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இதில் எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது. இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது நியாயமற்றது. எனவே ஒரு மாதத்தில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

;