tamilnadu

img

திருவிடைமருதூர் அரசு கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

திருவிடைமருதூர் அரசு கல்லூரி  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக பயிற்சி

உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார்

கும்பகோணம், ஜுன் 30-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுகாவில் அரசு கலை கல்லூரி திருவிடைமருதூர் தெற்கு வீதியில் உள்ள செந்தில் ஆண்டவர் அரங்கத்தில் துவங்கப்பட்டு 2025-26 ஆம் கல்வியாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  இன்று முதல் திருவிடைமருதூரில் கல்லூரி துவங்குகிறது. கல்லூரியின் நிரந்தர கட்டிடம் ஆடுதுறை தோட்டக்கலை அருகிலுள்ள 8 ஏக்கர் நிலப்பரப்பில்  கட்டப்பட உள்ளது. மேலும் சென்னைக்கு அடுத்த படியாக திருவிடைமருதூரில் தான் 5 புதிய பாடப்பிரிவுகள் அமைகிறது. நான்காண்டு சாதனையில் கல்லூரியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.  இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 270 மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 204 மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கல்லூரி ஆணையர் சுந்தரவள்ளி, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் கும்பகோணம் அன்பழகன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.