tamilnadu

img

உலகின் அதிவேக மனிதரான இந்தியர்? - சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

கம்பளா விளையாட்டில் ருசிகர சம்பவம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு எவ்வளவு பிரபலமோ அதே போலக் கர்நாடக மாநிலத்தில் கம் பளா எனப்படும் எருமை மாட்டுப் பந்த யம் புகழ்பெற்றது. அறுவடைத் திரு நாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டு தோறும் மங்களூரு, உடுப்பி ஆகிய கட லோர பகுதிகளில் 200 ஆண்டு களுக்கும் மேலாக இந்த பாரம்பரிய மிக்க எருமை மாட்டு பந்தயம் நடை பெற்று வருகிறது. 

நடப்பாண்டிற்கான கம்பளா தொடர் கர்நாடக மாநிலத்தின் கிராம பகுதிகளில் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில், தென் கன்னடா மாவட்டத்தின் மூடபித்ரி என்ற கிரா மத்தில் வெள்ளியன்று கம்பளா போட்டி நடைபெற்றது. மொத்தம் 250 ஜோடி எருமை மாடுகள் கலந்து  கொண்ட இந்த தொடரில், நிர்ண யிக்கப்பட்ட 142.50 மீட்டர் தொலைவை ஸ்ரீநிவாச கவுடா என்ற இளைஞர் தனது எருமை மாடுகளுடன் வெறும் 13.62 வினாடிகளில் கடந்து 30 ஆண்டு களுக்கு பின் புதிய வரலாறு படைத் துள்ளார்.  இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 100 மீட்டரை வெறும் 9.55 வினாடிகளில் கடந்து ஒலிம்பிக் நாயகனும், உலகின் அதிவேக மனி தனுமான உசேன் போல்ட்டின் (9.58 வினாடிகள்) சாதனையை ஸ்ரீநிவாச கவுடா தகர்த்துள்ளார். ஸ்ரீநிவாச கவுடாவின் அசத்தலான செயலை கர்நாடக செய்தி தொலைக்காட்சி நிறு வனங்கள் கொண்டாட நாடு முழு வதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஸ்ரீநிவாச கவுடாவை ஒலிம்பிக் கில் களமிறக்கினால் நிச்சயம் இந்தியா விற்கு பதக்கம் பெற்று தருவார் என்ற ஹேஸ்டேக்குடன் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பளா...

வயல்வெளி போன்ற அமைப்புடன் மாடுகள் எளிதாக ஓடும் வகையில் பிட்ச் அமைக்கப்படும். அந்த பிட்சில் சிறிதளவு நீர் நிரப்பப்பட்டு இரண்டு பக்கமும் 2 அடியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அமைக்கப்படும் பிட்ச் இரண்டாக பிரிக்கப்படும். விதிமுறைகளின் படி ஆளுக்கொரு பக்கம் தனது 2 ஜோடி எருமைகளுடன் பங்கேற்பார்கள். பந்தைய தூரத்தை முதலில் கடப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். பந்தைய தூரம் தோராயமாக 150 மீட்டருக்குள் இருக்கும். முன்பெல்லாம் எருமை வேகமாக ஓடுவதற்காக ஆணியை மூங்கில் குச்சியில் பொருத்தி குத்துவார்கள். இந்த செயலினால் ஜல்லிக்கட்டை போன்று கம்பளா சில காலம் தடை உத்தரவு பெற்றிருந்தது.   கடுமையான போராட்டத்துக்கு பின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது பிரஷ் போன்ற அமைப்பை வைத்து எருமையை ஓட்டுகிறார்கள். அதுவும் அடிக்கக் கூடாது. எருமையை துன்புறுத்தாமல் ஓட விட வேண்டும் என்பதே உச்சநீதிமன்ற விதிமுறை. 

ஆபத்தானதா?

ஜல்லிக்கட்டு காளையைப் போல கம்பளாவில் எருமைகள் பார்வையாளர்களுக்கு பெரியளவில் ஆபத்தை ஏற்படுத்தாது. ஆனால் எருமையை ஓட்டுபவருக்கு கடினமான உடல் வாகு பெற்றிருந்தாலும்  எருமைக்கு இணையாக ஓட வேண்டும். சற்று அசந்தால் எருமைகள் இழுத்து சென்று விடும். உயிரிழப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்ற படி 70% பாதுகாப்பான விளையாட்டு தான் இது. 

உண்மையில் உசைன் போல்ட்  சாதனை தகர்க்கப்பட்டதா?

இருவரும் வெவ்வேறு பிரிவினை சார்ந்தவர்கள். உசைன் ஓட்டப்பந்தயம். ஸ்ரீநிவாச கவுடா கம்பளா. இரண்டுமே கடினமானது தான். உசைன் தானாக ஓடுகிறார். ஸ்ரீநிவாச கவுடா எருமையின் இழுவையுடன் ஓடுகிறார்.   கம்பளா போட்டியில் எருமைக்கு ஈடாக எதிரணியை போட்டி போட்டு ஓடவேண்டும். எனினும் கம்பளாவில் எருமையை லேசாக அடித்தால் போதும். இழுக்கும் வேகத்தில் கால்களை தூக்கிவைத்தால் இலக்கை அடைந்து விடலாம். ஆனால் ஓட்டப்பந்தயத்தில் சக போட்டியாளருடன் கடுமையான போராட்டத்துக்கு இடையே ஓடி வெற்றி இலக்கை அடைய வேண்டும். இரண்டும் வெவ்வேறு தன்மைகளை உடையதால் தனி தனி சாதனையாக கூறுவது தான் ஒரே வழி.