tamilnadu

கொரோனா ஊரடங்கில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதாக தகவல்

மதுரை, மே 28- கொரோனா ஊரடங்கில் மதுரை மாவட் டத்தில் ஏழு மையங்களில் பிளஸ் 2 விடைத் தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடை பெற்றுவருகிறது. இப்பணிகள் முடிய ஜூன் 10-ஆம் தேதி ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் தேர்வு எழுதியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் விடைத் தாள்கள் திருத்தும் பணி ஒத்திவைக்க பட்டிருந்தது. இதையடுத்து தமிழகம் முழு வதும் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி புதனன்று தொடங்கியது.

மதுரை வருவாய் மாவட்டத்தில் மதுரை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் பெண்கள் பள்ளி (இரண்டு மையங்கள்), ஓசிபிஎம் பெண்கள் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட ஏழு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள நாக்கு கல்வி மாவட்டங்களிலும் அனை த்துப் பாடங்களிலும் சேர்த்து 1 லட்சத்து 74 ஆயிரத்து 17 விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது. விடைத்தாள்கள் திருத்துவ தற்காக 217 திருத்தும் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதிப்பீட்டு மையத்திலும் முதன்மைத் தேர்வாளர், கண்காணிப்பு அலுவலர், நான்கு உதவித் தேர்வாளர்கள் பணிபுரிகின்றனர். வருவாய் மாவட்டத்தைப் பொருத்தவரை விடைத் தாள்கள் திருத்தும் பணியில் 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அரசு கூறுவது இதுதான்...
விடைத்தாள் மையங்களுக்கு செல்வ தற்கு முன்பாக ஆசிரியர்கள் வெப்ப மானி யைக்கொண்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது. முகக்கவசம், கை சுத்தி கரிக்கும் திரவம் ஆகியவை வழங்கப்படு கிறது. மையங்களுக்குள் செல்வதற்கு முன்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனு மதிக்கப்படுகின்றனர். வீடுகளில் இருந்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதிப்பீட்டு மையங்க ளுக்கு அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் 37 பேருந்துகள் இயக்கப்படுகின் றன. வியாழனன்று விடைத்தாள் திருத்தும் பணி கூறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி களிடம் கேட்டபோது புதனன்று விடைத்தாள் சரி பார்க்கப்பட்டு மையங்களுக்கு அனுப்பட் டுள்ளது. தற்போது கொரோனா நோய்ப் பரவல் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு மருத்து வப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுதான் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆசிரி யர்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுகள் செய்து கொடுக்க்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஜூன் 10-இல் முடிவடையலாம்?
விடைத்தாள் திருத்தும் பணி என்பது முடிவதற்க்கு ஜூன் 10 ஆம் தேதியோ அல் லது அதற்குப் பின்னரோ ஆகலாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

;