tamilnadu

img

கொரோனா நிவாரண நிதியை துரிதமாக வழங்கிடுக..... சிஐடியு வேண்டுகோள்

மதுரை:
சிஐடியு மதுரை மாநகர் செயலாளர் ஆர்.தெய்வராஜ்,  புறநகர் செயலாளர் கே. அரவிந்தன்  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த மார்ச் 24ம்தேதி முதல் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பின்பு தமிழக அரசு முறைசாரா தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணநிதியும், கட்டுமானம், ஆட்டோ, நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கு கூடுதல் நிவாரணமும் அறிவித்தது, இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, 31நாட்கள்கடந்த பின்பும் அரசு அறிவித்த முதல்கட்ட நிவாரண தொகையே பெரும்பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை, நிவாரணதொகை பெறுவதற்கான வழிமுறைகளை தொழிலாளர்களுக்கு ஊடகங்கள் மூலமாக தெரிவிக்காமல் தொழிற்சங்கங்கள் நலவாரிய உதவி ஆணையரிடம் வாட்ஸப் நம்பர் பெற்று நிவாரணம் கேட்டு ஆவணங்கள் அனுப்பப்பட்டது. மேலும் நலவாரிய அட்டை வைத்துள்ள ஒருபகுதியினருக்கு வங்கி கணக்கு இல்லாத நிலையில் வங்கிகணக்கு(0-பேலன்சில்)துவக்க வங்கிகள் மறுத்து வருகின்றன. மேலும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு (ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட) ஊக்கதொகை வழங்கப்படும்  என்று அரசு அறிவித்தநிலையில் அதற்கான அரசு உத்தரவு இதுவரை வெளியிடவில்லை, சுகாதார தொழிலாளர்களுக்கு போதுமான மாஸ்க், கையுறைகள் வழங்காத நிலை இருந்து வருகிறது மேலும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மதுரையில் 1500க்கும்மேற்பட்டவர்கள்உள்ளனர்.

அவர்களுக்கு உரியநிவாரணம், இருப்பிடவசதி, மருத்துவ வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்புகொண்டபோதும் போதிய கவனமின்றி  மாவட்ட நிர்வாகம் உள்ளது, சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள், ரேசன் கடைபணியாளர்கள் ஆகியோரின் பணிச்சிரமங்களை கவனத்தில் கொண்டு அவர்களுக்கான ஊக்கதொகைகளையும்  வழங்கிடவேண்டும்.  எனவே மேற்கண்ட பிரச்னைகளை அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில்கொண்டு கூட்டுறவுநெசவாளர்கள் உட்பட முறைசாரா தொழிலாளர்களுக்கும்,  சுகாதார தொழிலாளர்களுக்கும் நிவாரணம்மற்றும் ஊக்கதொகை கிடைப்பதற்கும் வங்கிகணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு துவக்கிடவும், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை செய்திடவும் இப்பணிகளை துரிதப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழு அமைத்திட வேண்டும். எடுக்கும் முடிவுகளை ஊடகத்தின் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
 

;