கோவையில் ரூ.9.67 கோடியில் ஹாக்கி மைதானம்
உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்
கோவை, ஏப்.27- கோவையில் ஞாயிறன்று நடை பெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி, ரூ.29 கோடியே 99 லட்சத்தில் முடிவுற்ற 64 திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ரூ.82 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 132 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், அவர் பேசுகையில், “அனைவருக்கும் தேவையானவற்றை அறிந்து திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மகளி ருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம், 700 கோடி பயணங்களை மேற் கொள்ளப்பட்டுள்ளன. உயர்கல்வி படிக்கும் மூன்று லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயி ரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 3.50 லட்சம் மாண வர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். உரிமைத் தொகை பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க லாம், என முதல்வர் அறிவித்துள்ளார். ஆகையினால் இதில் கூடுதலாக மகளிர் பயன் பெறுவார்கள். பணிக்குச் சென்ற மகளிர், இன்று தொழில் முனைவோர்களாக மாறி யுள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக உள் ளனர். 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வர உள்ளனர். இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்த அரசு என்றும் மக்களுக்கு பக்க பலமாக இருக்கும்; இந்த அரசுக்கு மக்களும் பக்க பலமாக துணை நிற்க வேண்டும்” என்று கூறினார்.